வெள்ளி, 3 டிசம்பர், 2010

புலி ஆதரவு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு போராட்டங்களில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன மற்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் தகவல் திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக