வெள்ளி, 3 டிசம்பர், 2010

லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக நடைபெற்ற ஆர்பாப்பாட்டத்தைக் கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. சுய தொழில் புரிவோருக்கான சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவரும், மேல் மாகாண ஆளுநருமான அலவி மௌலானா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்தும் வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுவரும் ஆதரவை உடனே நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோசம் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக