தொடர்ந்து தான் நடித்த இரண்டு தெலுங்கு படங்கள் வெளிவர இருப்பதால் ஆந்திராவில் ஆனந்தமாய் உள்ளார் ப்ரியாமணி. ராவணன் படத்திற்கு பிறகு தமிழில் தலைக்காட்டாத ப்ரியாமணியிடம் தமிழ் பக்கம் வருவீங்களா எனக் கேட்டால், தமிழில் நல்ல கதைகள் இல்லை, என்னிடம் கதை சொல்லும் புதிய இயக்குனர்கள்கூட நல்ல கதைகள் வைத்திருப்பதில்லை என ரொம்பதான் அலட்டிக் கொள்கிறாராம்.
ப்ரியாமணியை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. தன் நடிப்பால் அவர் தேசிய விருது வரை உயரக் காரணம் இயக்குனர் அமீரின் பருத்திவீரன். அதன் பிறகு அமீர் படத்துக்கே நடிக்க முடியாது என சொல்லிவிட்டார் ப்ரியாமணி. சேரனுக்கும் அதே கதிதான். பருத்திவீரன் படம் வெளியானதும் ப்ரியாமணியை தேடி பல நல்ல வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதை எல்லாம் விரும்பாத ப்ரியாமணி, தான் ஒரு கவர்ச்சி நடிகை என நிரூபிக்க விஷாலுடன் மலைக்கோட்டை, ஜீவன் நடித்த தோட்டா, பரத்துடன் ஆறுமுகம் என கமர்ஷியல் கலாட்டாவில் களம் இறங்கினார்.
ஆனால் பப்பு வேகலை. மணிரத்னத்தின் ராவணன் படமும் ஏமாற்றமாகவே அமைந்தது. தெலுங்கில் நாடோடிகள் ரீமேக்கில் ப்ரியாமணி நடித்தார். அதை இயக்கியது நம் தமிழ் இயக்குனர் சமுத்திரக்கனி. படம் செம ஹிட்.
ப்ரியாமணி ஏற்கனவே அமீர் சிறந்த டைரக்டர் இல்லைன்னு சொல்லி வாங்கி கட்டிகிட்டவர்தான். ஆர்யா நிலைமை இவருக்கும் வந்து விடும் போலிருக்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக