வெள்ளி, 3 டிசம்பர், 2010

நடிகை யுவராணியின் கணவர்,விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார

 
தாய்லாந்து நாட்டை சேர்ந்த `மசாஜ்' அழகிகள் 6 பேர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணீர் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.

புகார் மனுவில், `மசாஜ்' கிளப்பில் வேலை தருவதாக அழைத்து வந்துவிட்டு, விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்று நடிகை ஒருவரின் கணவர் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

அழகிகள் கண்ணீர்


தாய்லாந்து நாட்டை சேர்ந்த அழகிகள் பஜோன், அருண்சிஜா, திம்னா, போஸ்ரி, தமாகோன், சுரையா ஆகியோர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கண்ணீருடன் வந்திருந்தனர். அவர்களுடன், வக்கீல்களும், மகளிர் அமைப்பை சேர்ந்த கல்யாணசுந்தரி, விஜயமேரி, சுமதி தட்சிணாமூர்த்தி ஆகியோரும் வந்திருந்தனர். தாய்லாந்து அழகிகள் 6 பேரும் புகார் மனு ஒன்றை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தனர். புகார் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நடிகையின் கணவர்


தாய்லாந்து நாட்டில் இருந்து எங்களை போல 15 இளம் பெண்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தமிழகத்துக்கு வந்தோம். பிரபல நடிகை ஒருவரின் கணவரும், அவரது நண்பர்கள் 2 பேரும், எங்களை அழைத்து வந்தார்கள். `மசாஜ் கிளப்'களில் வேலை தருவதாகவும், மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தருவதாகவும் எங்களிடத்தில் ஒப்பந்தம் போட்டார்கள்.

ஒரு வருடம் வேலை பார்க்க வேண்டும் என்றும், தங்கும் இடம் இலவசமாக தருவோம் என்றும், ஆனால் நாங்கள் விருப்பப்பட்ட உணவை சமைத்து சாப்பிட்டுக்கொள்ளலாம் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் `மசாஜ்' செய்யும் கலையை கற்றுள்ளோம். எனவே, `மசாஜ்' மட்டும்தான் செய்வோம் என்றும், வேறு தவறான வழியில் எங்களை ஈடுபடுத்தக்கூடாது என்றும் சொல்லித்தான் வேலைக்கு வந்தோம்.

விபசாரத்தில் தள்ள முயற்சி

ஆனால் 2 மாதங்கள் மட்டும் ஒப்பந்தப்படி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் கொடுத்தார்கள். சென்னையில் தியாகராயநகர், வடபழனியில் உள்ள ஒரு ஓட்டல் ஆகிய இடங்களில் `மசாஜ் கிளப்'களில் நாங்கள் 6 பேரும் வேலைபார்க்கிறோம். மீதி உள்ள 9 பெண்களும் மதுரை, திருப்பூர், பெங்களூர் ஆகிய இடங்களில் `மசாஜ் கிளப்'களில் பணிபுரிகிறார்கள்.

கடந்த 8 மாதமாக எங்களுக்கு பேசியபடி மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தராமல், ரூ.15 ஆயிரம் மட்டுமே தருகிறார்கள். மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் தரவேண்டுமென்றால் வாடிக்கையாளர்களுடன் உல்லாசத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். வாடிக்கையாளர்களை நிர்வாணமாக படுக்க வைத்து மசாஜ் செய்ய சொல்லுகிறார்கள். எங்களையும் ஆபாசமாக உடை அணிய சொல்லுகிறார்கள். ஒப்பந்தத்தை மீறி எங்களுக்கு `செக்ஸ்' தொல்லை கொடுக்கிறார்கள்.

கொலை செய்வோம்

`செக்ஸ்' தொழில் செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை. இதனால் எங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுங்கள் என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தோம். எங்களது பாஸ்போர்ட்டையும், விசாவையும் பறித்து வைத்துக்கொண்டனர்.

சொந்த நாடான தாய்லாந்துக்கு அனுப்ப வேண்டுமென்றால் ஒவ்வொருவரும் தலா ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று கேட்கிறார்கள். அவ்வாறு பணம் கொடுக்காவிட்டால் ஊருக்கு திரும்பி போக முடியாது என்றும், `செக்ஸ்' தொழில் செய்து எங்களுக்கும் சம்பாதித்து கொடுங்கள், நீங்களும் சம்பாதித்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை சொல்லுகிறார்கள். இல்லாவிட்டால் எங்களை கொலை செய்து, பிணத்தை கடலில் வீசிவிடுவோம் என்று பயமுறுத்துகிறார்கள்.

எங்களை கொத்தடிமை போல் ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். அந்த அறை முழுவதும் கரப்பான் பூச்சிகளை விட்டு எங்களை சித்ரவதை செய்தனர். அவர்களுடைய கொடுமைகள் தாங்காமல் நாங்கள் தப்பி வந்து இந்த புகார் மனுவை கொடுத்துள்ளோம்.

சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து எங்களை சொந்த நாட்டுக்கு நல்லபடியாக திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எங்களைபோல் சித்ரவதையில் தவிக்கும் மேலும் 9 பெண்களையும் மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடனடி நடவடிக்கை

இந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அசோக்நகர் உதவி கமிஷனர் பரந்தாமனுக்கு, கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர் உத்தரவிட்டார். இதுபோல் மசாஜ் கிளப்களில் விபசாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷகில் அக்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட `மசாஜ் கிளப்'கள் உள்ளன. அவற்றை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.



சமாதானம் ஏற்பட்டு விட்டதாக போலீசார் அறிவிப்பு


`விபசாரத்தில் தள்ள முயற்சிக்கவில்லை' என்று நடிகையின் கணவர் மறுப்பு
தாய்லாந்து அழகிகளை திருப்பி அனுப்ப சம்மதம்

தாய்லாந்து அழகிகளை விபசாரத்தில் தள்ள முயற்சிக்கவில்லை என்று நடிகையின் கணவர் போலீஸ் விசாரணையில் மறுப்பு தெரிவித்தார். அதோடு தாய்லாந்து அழகிகள் அனைவரையும் அவர்களது நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைப்பதாகவும் அவர் போலீசாரிடம் உறுதியளித்தார். இதன்பேரில் இந்த பிரச்சினை சமாதானமாக முடிக்கப்பட்டதாக நேற்றிரவு போலீசார் தெரிவித்தனர்.

புகார் கூறப்பட்டவர்கள் பெயர் ரவீந்திரா, இமானுவேல், ரமேஷ் என்று தெரியவந்ததாகவும், அவர்களில் ரவீந்திரா நடிகை யுவராணியின் கணவர் என்றும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒப்பந்தப்படி இன்னும் இரண்டு மாதங்கள் வேலை பார்க்க வேண்டியிருந்தாலும், வேலை பார்க்காமலேயே அவர்களுக்கு இரண்டு மாத சம்பளத்தையும் கொடுத்து, அனைவரையும் விமானத்தில் தாய்லாந்து நாட்டிற்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைப்பதாகவும், புகார் கூறப்பட்டவர்கள் உறுதியளித்தார்கள் என்றும், இதை புகார் கொடுத்த தாய்லாந்து அழகிகளும், அவர்களது வக்கீல்களும், உடன் உதவிக்கு வந்த மகளிர் அமைப்பை சேர்ந்தவர்களும் ஒத்துக்கொண்டார்கள் என்றும், விசாரணை அதிகாரியான உதவி போலீஸ் கமிஷனர் பரந்தாமன் நேற்றிரவு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக