புதன், 24 நவம்பர், 2010

Ramadas:இளைஞர் கையில் பா.ம.க., ஒப்படைப்பு : ராமதாஸ்

தர்மபுரி : ""பா.ம.க., இனி, இளைஞர் கையில் ஒப்படைக்கப்படும்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

தர்மபுரியை அடுத்த நல்லம்பள்ளியில், பா.ம.க., சார்பில் நடந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ஆலோசனை கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், பா.ம.க., சார்பில் நடத்தப்படும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் ஆலோசனை கூட்டம், மாநிலத்தில் 30வது கூட்டமாக நடத்தப்படுகிறது.

பென்னாகரம் தொகுதியில் வன்னியர்கள், ஒரு லட்சத்து 14 ஆயிரம் பேர் இருந்தும், நம்மால் வெற்றி பெற முடியவில்லை. வன்னியர்கள் ஓட்டு விழுந்திருந்தால், நாம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனாலும், 42 ஆயிரம் ஓட்டுக்களை பெற்று, பென்னாகரம் இடைத்தேர்தல் மூலம், தமிழகத்தின் அனைத்து கட்சிகளின் பார்வையும் நம்மை பார்க்க வைத்தோம்.

பென்னாகரம் தொகுதியை போல், வரும் சட்டசபை தேர்தலில் 100 தொகுதியில் 80 சதவீதம் ஓட்டுக்கள் நமக்கு விழுந்தால், பா.ம.க., ஆட்சி அமைவது உறுதி. பா.ம.க., இனி இளைஞர் கையில் ஒப்படைக்கப்படும். 18 முதல் 25 வயது உள்ளவர்களே, கட்சியின் கிளை செயலராக தேர்வு செய்யப்படுவர்.தமிழகத்தில் தமிழர் அல்லாமல் பல மாநிலத்தவர், முதல்வராக இருந்து வரும் நிலையில், இரண்டரை கோடி மக்கள் உள்ள வன்னிய சமுதாயத்தினர் முதல்வராக முடியவில்லை. இதற்கு காரணம் நம்மிடம் ஒற்றுமை இல்லை.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
கோவை சிவா - கோவை,இந்தியா
2010-11-24 11:51:15 IST
வந்துட்டாருய வந்துட்டாரு, என்னடா ரொம்ப நாலு காணமுன்னு நினைச்சோம், தினமலர் வாரம் வாரம் ராமதாஸ் செய்திகள் போட்டாதான் வாசகர்கள் எல்லாரும் கவலையை மறந்து கொஞ்சம் சந்தோசமா இருப்பாங்க, இன்னிக்கு பாருங்க குறைந்தது 100 message வரும், வாசகர்கள் என்ஜாய் start music...
விஸ்வநாதன். ச - வேலூர்,இந்தியா
2010-11-24 11:47:25 IST
அப்போ மாணவர் அணி????...
ngsami - Auckland,இந்தியா
2010-11-24 11:34:56 IST
அண்ணனுக்கு தேர்தல் நெருங்க,நெருங்க தலை அதிகமா சூடேருது. இன்னும் யாரும் கூட்டணிக்கு கூப்பிடவில்லை. அதனால, தினம் ஒரு வெடியா வெடிக்குறார். எல்லாம் போயி இப்ப இளைய தலைமுறைக்கு வந்திருக்கார். இன்னும் சில நாள்ல, பள்ளி மாணவர் கையில் கட்சியை ஒப்படைப்பதாக அறிக்கை விடுவார். அதன் பின், ஆரம்பபள்ளி மற்றும் U.K.G.,L.K.G க்கு கட்சியை ஒப்படைக்கலாம் என அறிக்கை விடுவார்....
பிரபாத்.P - PONDY,இந்தியா
2010-11-24 11:25:08 IST
இந்த கொசு தொல்ல தாங்க முடியல...
சாமி - MUSCAT,ஓமன்
2010-11-24 11:17:48 IST
ஏம்பா இந்த ஆளு Spectram ஊழலை பற்றி பேசமாட்டேங்குறாரே ஏன் ????...
மடையன் - சென்னை,இந்தியா
2010-11-24 11:01:16 IST
நானும் ரௌடி.. நானும் ரௌடி... நானும் இங்க தான் இருக்கேன்......
அலாவுதீன் பாஷா - துபாய்,இந்தியா
2010-11-24 10:37:29 IST
சென்ற வாரம் புதுச்சேரி போய்விட்டு வந்ததில் இருந்து இப்படிதான் எதாவது உளறிக்கொண்டு உள்ளார். நம்ம தாஸ் அண்ணே ஏதாவது... சரக்கு மலிவாக கிடைக்குதுன்னு பூந்து விளையாடி விட்டாரோ .......
H narayanan - Hyderabad,இந்தியா
2010-11-24 10:36:34 IST
Its a very good article... I just love this... this joke makes my day. PMK could not win even after getting 80% of the vote at Pennagaram. This shows, Vanniyars cannot make the difference drastically....
அஸ்கு புஸ்கு - பெங்களூர்,இந்தியா
2010-11-24 09:49:04 IST
வடை போச்சே........
பகதூர் - துபாய்,இந்தியா
2010-11-24 08:57:52 IST
காலையிலேயே நான் டூட்டி போகணும். உன்னை வந்து பார்த்துக்கிறேன்....
தமிழ்செல்வன் - Chennai,இந்தியா
2010-11-24 08:50:22 IST
அய்யா நீங்கள் அரசியலை விட்டு விலகினால் போதும். நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம் !! இதுவே நீங்கள் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் செய்யும் மிக பெரிய தியாகமாகும்...
tamilan - tamilnadu,இந்தியா
2010-11-24 08:48:23 IST
தமிழ் நாட்ல வன்னியன் மட்டும் தான் இருக்கானா ? அப்ப நாங்க எல்லாம் அந்நியனா...
Mannan - Chennai,இந்தியா
2010-11-24 08:28:29 IST
காலம் கனியும். உறவுகள் எல்லாம் ஓடுவர். நாற்றம் வரும்.......
க.ஈஸ்வரன் - திருப்பூர்,இந்தியா
2010-11-24 07:44:55 IST
என்னதான் சொல்ல நினைக்கிரிங்க. வன்னியரல்லாம் சேர்ந்து உங்களை முதல்வர் பதவியல் உட்க்கார வைக்கவேண்டும் என்று இல்லையா? அது இந்த ஜன்மத்தில் நடக்காது. தயவு செய்து கட்சியை நல்ல பொறுப்பான நபர்களிடம் கொடுத்துவிட்டு நீங்களும் உங்கள் மகனும், காடுவெட்டியும் வேறு வேலையை பார்க்கபோவது நல்லது...
venkat - Doha,கத்தார்
2010-11-24 07:41:05 IST
ரெம்ப சின்னபிள்ளதனமா ல்ல இருக்கு. தனிழனை வச்சி கொமெடி கிமெடி பன்னால இல்ல?...
கே.ஜீவிதன் - villupuram,இந்தியா
2010-11-24 06:46:30 IST
ஒரு அரசியல் கட்சிஎன்றால், நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி தனது நிலை என்ன வென்று மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அதன் கடமை. ஆனால் லண்டன் ராம் கூறுவது போல், இதுவரை ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி எதுவுமே கூறவில்லை இவர். எப்போது வாயை திறந்தாலும் ஜாதியை பற்றியே பேசுகிறார். வாசகர்கள் இவரை கிண்டலடிப்பது நியாயம் தான். ஜாதியை பற்றி பேசவேண்டுமென்றால், அவருடைய பத்திரிகையில் பேசிக்கொள்ளட்டும். தினமலராவது அவரது ஜாதி பேச்சை மட்டுமாவது வெளியிடாமல் இருந்ததால் நல்லது....
தமிழன் - சென்னை,இந்தியா
2010-11-24 06:45:14 IST
மொதல்ல தமிழ் தமிழ்னு பேசினார். இப்போ வன்னியர் வன்னியர்னு பொலம்புரார். இவர நம்ப யாரும் தயாரா இல்லன்னு இவருக்கே தெரியும். இருந்தாலும் எப்படி பேசுது பாரு. இப்படியே பேசிட்டு வைகோ மாதிரி இவரையும் ஜாதி பெயர் சொல்லி தீவிரவாதம் துண்டுரார்னு சொல்லி கொஞ்சம் நாள் உள்ள துக்கி போடுங்கப்பா. இவர் தொல்ல தாங்க முடியல...
sathish - cbe,இந்தியா
2010-11-24 06:11:40 IST
பரவாயில்லையே ,இவராச்சு சொல்லிக்கிட்டு தன் வாரிசை நுழைய விடறாரு,,, ஆனா இந்த கேடு கெட்ட தி .மு.க, தலையோ தன் வாரிசுகளுக்குத்தான் அரசை தாரை வார்த்து, தமிழ் நாட்டையே சுரண்டி சுரண்டி இப்போ இந்தியாவை சுரண்டும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கு அல்லவா,,, இன்னும் இப்படியே போனா உலகத்தையே சுரண்ட ஆசை பட்டாலும் ஆச்சரியம் இல்லே,,, விஷ பாம்பிற்கு பால் வார்த்தா இப்படி தான் அனுபவிக்கனும்,,இளைஞர் கையில் தான் கொடுக்கணும் என்று, பதினெட்டு வயசு முதல் இருபத்தி அஞ்சு வயசு வரமட்டும் தான் ,என்றால் ப,ம .க, வே காணாமே போயிடும்,,,குடும்ப அரசியலை வளர்த்தா முச்சந்தியில் வச்சு சவுக்காலே அடியுங்கல்னு நீங்க சொன்ன நியாபகம் எங்களுக்கு இருக்கு,, ஆனா அது நீங்க மறந்திருப்பீங்க,,, நல்லது தான் உங்களுக்கு நியாபகமே இருக்காதே,,, நம்ம கேடு கெட்ட தலைவர் மாதிரி,,,...
raj - vellore,இந்தியா
2010-11-24 06:04:35 IST
vsm ali good ஜாப். அட்லீஸ்ட் அவர் கூறும் பிரிவினர் கூட அவருக்கு ஓட்டு போடா கூடாது....
ravi - Kanyakumari,இந்தியா
2010-11-24 05:58:41 IST
Mr. Ramadas தயவு செய்து எதுவும் பேசாதீர்கள் உங்கள் டாக்டர் தொழிலை பார்த்து விட்டு எதாவது ஐயாவோ அம்மாவோ கொடுத்தால் வாங்கி கொண்டு கிடைப்பதை சுருட்டிகொண்டு இருக்கவும். தேவை இல்லாமல் வன்னியர் வன்னியர் என்று பேசாதீர்கள்...
தேவ் - நெல்லை,இந்தியா
2010-11-24 05:36:07 IST
ஜாதியையும் மதத்தையும் நம்பி தேர்தலில் நிற்கும் இது போன்ற கட்சிகளை என்ன செய்வது?. மக்களுக்கு நல்லது செய்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது இல்லை....
Basha - Chennai,சிங்கப்பூர்
2010-11-24 05:32:52 IST
ஆம், இளைஞர் அன்புமணி ராமதாஸ் கையில் பா.ம.க ஒப்படைக்கப்படும்....
கே.viswanathan - taipai,இந்தியா
2010-11-24 05:12:27 IST
அதாவது அடுத்த தலைவர் அன்புமணி ராமதாஸ். அதை மறைமுகமா சொல்லுற பலே ரொம்ப சூப்பர் !!!!!!!!!!!...
பில்லா பெரியசாமி - கரூர்,இந்தியா
2010-11-24 05:08:58 IST
'...எண்பது சதவீதம் ஓட்டுக்கள் விழுந்தால் பா.ம.க ஆட்சி அமைவது உறுதி '...அத்தைக்கு மீசை முளைக்கட்டும் ..அப்புறம் சித்தப்பா ஆகலாம் ! பா.ம.க வை இளைஞர்கள் கையில் ஒப்படைக்கப் போகிறாராமே ! அப்புறம் ராமதாஸ் கதி ? ...மக்கள் தொலைக்காட்சியில் 'கோணங்கிகள்' நிகழ்ச்சியில் நடிக்கப் போகிறாராம் !...
அம்பானி - n,இந்தியா
2010-11-24 04:38:48 IST
தலைவர் அன்பு மணி தானே ????????.....உன் காமடிக்கு அளவே இல்லையா ??????????...
அரசியல்வ்யாதி - லாஸ்அன்ஜெலீஸ்,இந்தியா
2010-11-24 04:19:00 IST
எந்த இளைஞர் கையிலே குடுக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு .. அவர் பேரு அன்புமணி ......
கண்ணன் - LONDON,யுனைடெட் கிங்டம்
2010-11-24 04:15:09 IST
இளைஞர் யாரு அன்புமணியா...
vsm ali - jiangmen,சீனா
2010-11-24 04:06:47 IST
அய்யா, நீங்களே இளைஞர் மாதிரிதான் இருக்குறீங்க. அதுனால , அவசரப்பட்டு கட்சியை யாரிடமும் ஒப்படைத்து விடாதீர்கள். நீங்களே தலைமை ஏற்று கட்சியை நடத்துங்கள். ஒவ்வொருநாளும் ஏதாவது அறிக்கை விட்டுக்கொண்டே இருங்கள். எங்களுக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்....
ராஜேஷ் - Melbourne,ஆஸ்திரேலியா
2010-11-24 04:03:12 IST
அய்யா என்ன பேசுறதுன்னு தெரியமா பேசுறாரு.. 100 தொகுதியில் 80 சதவிகித ஓட்டு விழுந்தால் நாம ஆட்சி அமைக்கலாம்ன்னு சொல்லுறாரு. அப்புறம் தமிழகத்தில் 2 .5 கோடி வன்னியர் இருக்காருன்னு சொல்லுறாரு.. போற போக்க பாத்த தமிழகத்தில் வன்னியர் மட்டும் தன இருக்காங்கன்னு சொல்லுவாரு போல. ப.ம.க வ இளைஞர் கைல கொடுக்க போறேன்னு சொல்லிட்டு கட்சி கிளை செயலர் பதவி மட்டும் கொடுக்குறாரு.. மத்த பதவி எல்லாம் யாருக்காம். யாராவது அய்யாவுக்கு எப்படி பேசுறதுன்னு சொல்லி கொடுங்க.இல்ல என்ன பேசுறதுன்னு எழுதி கொடுங்க.. அவரு வாயில வந்தத எல்லாம் பேசுறாரு.....
அய்யா... தாயே.. ஒரே ஒரு MP சீட் - தமிழ்நாடு,இந்தியா
2010-11-24 03:59:39 IST
இந்த காமெடி தானே வேண்டாம் ன்னு சொல்லறது.இளைஞர் குறிப்பிட்டது அன்பு மணி தானே ... மந்திரி பதவிக்கு அவர் ஒருவரே தகுதியானவர்.. இந்தமாதிரி எந்தனை உறுதி மொழியை நாங்க கேட்டுயிருப்போம் ... போய் வேலை வெட்டிய பாருமய்யா...காலையிலேயே இந்த நியூஸ் பாத்துடேனே ... விளங்குமா ??...
Karuppiah சத்தியசீலன் - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
2010-11-24 03:34:11 IST
பாகிஸ்தான்ல பிறந்த மன்மோகன் சிங்க் பிரதமாராக உள்ளாரே.அதை ஏன் சொல்லவில்லை? இலங்கையில் வசிக்கும் தமிழர்கள்,நம் மக்கள் என்றால்,கர்நாடகாவில் பிறந்த ஜெ ஜெ வும் தமிழர் தான். எம் ஜி ஆர் ரின் சொந்த ஊர் பாலக்காட்டில் முன்பு ,தமிழ் நாடுவுடன் இணைந்து இருந்தது....
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-11-24 03:25:41 IST
என்ன மாமா இப்டி பொசுக்குனு சொல்லிபுட்ட, இளைஞர் கையில் பா.ம.க ஒப்படைக்க படுமா? இருந்தாலும் தினமலர் நிருபருக்கு ரொம்பத்தான் குசும்பு அதிகம், நான் தலைப்ப படிச்சிட்டு ரொம்ப சந்தோஷ பட்டேன் என்னடா நம்ப மாமா முதல்வர் நாற்காலிய பெரிய மனசு பண்ணி இளைஞருக்கு விட்டு தர துணிஞ்சிட்டாரே இந்த தில்லு அந்த பெருசுக்கு இல்லியே அப்டின்னு அவசர பட்டுட்டேன். ஆனா நல்லா படிச்சி பாத்ததும் தான் தெரியுது,கட்சியின் கிளை செயலர் பதவியை மட்டும் தான் இளைஞருக்கு ஒதுக்க படும் ன்னு எழுதி இருக்காங்க...நிருபரே கொஞ்ச நேரத்தில என்னைய திக்கு முக்காட வச்சி புட்டீங்களே...என் மாமனாவது அந்த மாறி சொல்றதாவது...சரி விசயத்துக்கு வருவோம், மறுபடியும் என் மாமன் வன்னியர் வன்னியர் ன்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டாரு...100 தொகுதியில 80 சதவீதம் ஓட்டுக்கள் விழுந்தா பா.ம.க ஜெயிக்ம்னு சொல்றியே உன்னைய என்ன பண்றது எனக்கு வர கோவத்துக்கு அப்டியே உன் மூஞ்சில குத்தனும் போல இருக்கு...லூசு மாறி பேசுறியே கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா? எப்டியா ஜெயிக்க முடியும்? என் சின்ன மாமா சீனிவாச கவுண்டர் என்னானா சொல்லாம கொள்ளாம காங்கிரசுல போயி சேந்திட்டாறு...பாண்டிச்சேரியில நம்ம கட்சிக்கு சீல் வச்சிட்டானுங்க இந்த மாறி நம்ம கட்சி நாசமா போய்கிட்டு இருந்தா எப்டி ஜெயிக்க முடியும். நீ தெளிவாவே பேச மாட்டியா? தினமலர் நிருபருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இனிமே என் மாமன்கிட்ட பேட்டி எடுக்குறதுக்கு முன்னாடி ஒரு தடவ வாய ஊத சொல்லுங்க...சரி சரி யோவ் தாசு சேவல் கூவுற சத்தம் கேட்குது எல்லாரும் வந்து உன்னிய கும்ம போறாங்க. அதுக்குள்ள எங்கயாவது ஓடி போய்டு...நான் கிளம்புறேன் வர்ட்டா......
ராம் - லண்டன்,யுனைடெட் கிங்டம்
2010-11-24 02:36:52 IST
We can understand, you are going to give party leadership to your son. What happened to you Ramadoss, why are you not saying anything against Spectrum scam, few years back for all the things you guys opposed..now what happened. PMK is one of the worst parties in India who doesn't have any real value. IF YOU HAVE REAL GUTS YOU MUST STAND IN ALL 100 CONSTITUNCIES ALONE....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-11-24 02:03:29 IST
யோவ் டவுசர் உன்னை மாறி ஜாதியாலும், மதத்தாலும், எல்லா வகையிலும் பிரிவினைவாதம் பேசி, மாநிலத்தையும், நாட்டையும் துண்டாடி, கலகத்தை மூட்டி, பிணங்களின் மேல் ஆட்சி செய்ய நினைக்கும் ஒரு கேடு கெட்ட தமிழன் முதல்வராவதை விட, தமிழே தெரியாத ஒரு ஆப்ரிக்கா காட்டு மிராண்டி முதல்வராவது எவ்வளவோ மேல். இதுபோல மக்களை பிரித்து ஒருவருக்கொருவர் வன்மத்தை தூண்டி மக்களை மிருகமாக்கும் காட்டுமிராண்டி மனிதனை விட ஒரு மனிதகுரங்கு முதல்வர் ஆனால் கூட பரவாயில்லை. அதுகூட ஒன்னோடு ஒண்ணா ஒத்துமையா பேன் பாத்துக்கிட்டு திரியும். உன்னை மாறி ஜாதி வெறிய தூண்டிவிட்டு குரங்குகளை பிரிக்காது. என்னை பொறுத்தவரை, உன்னை விட, ஒற்றுமையாய் ஒன்னோடு ஒன்னு கலந்து பேசி பழகி ஆதரவாய் பேன் பார்த்து வாழும் குரங்குகள் எவ்வளவோ மேல்....
அருணாசலம் - தோகா,கத்தார்
2010-11-24 01:41:32 IST
""பா.ம.க., இனி, இளைஞர் கையில் ஒப்படைக்கப்படும்,'' - அவர்கள் வைப்பார்கள் இந்த கொள்ளைகார, சுயநலவாத தாசுக்கு ஆப்பு.......
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-11-24 01:37:40 IST
யோவ் டவுசர், என்னையா உன்கூட ஒரே ரோதனையா போச்சு. எப்போ பாத்தாலும் வன்னியன்... வன்னியன்... ன்னு அடுத்தவன் பிராணன வாங்குறியே, அப்படி வன்னியனுக்கு என்னதான்யா பிரச்சனை வாழ்க்கைல. வன்னியனுக்கு என்ன வேணும் இப்போ? பேசாமா உங்க எல்லோரையுமே முதல்வர் ஆக்கிட்டா உங்க பிரச்சினஎல்லாம் முடிஞ்சிடுமா? இருக்கிற அரசாங்கத்தினால் தீர்க்க முடியாத அளவுக்கு உங்களுக்கு என்ன பிரச்சினை? நீ முதல்வராயிட்டா, உடனே எல்லா வன்னியனும் நெய்யும் கறியும் திங்க போறானுகளா? இல்ல, சொல்லு, தெளிவா சொல்லு, பார்ப்போம். இப்போ எந்த ஜாதிலதான் ஏழைகள் இல்லை, முன்னேராதவங்க இல்லை, எழுத படிக்க தெரியாதவங்க இல்லை? உடனே அவங்க எல்லோருமே முதலமைச்சர் ஆகணும்னா பறக்கிராணுக? வன்னியன் முன்னேறாததுக்கு வன்னியந்தான் காரணம். கொஞ்சம் கூட டீசன்ட்டா யோசிக்க கூட முடியாத உன்னிய மாறி ஆளுங்க எல்லாம் முதல்வர் ஆகி நாட்ட ஆண்டா அங்கெல்லாம் மக்களா இருக்க முடியும்? ஒன்னு ஒழுங்கா வன்னியனுக்கு என்ன பிரச்சினைன்னு சொல்லு, அரசாங்கத்திடம் உங்க குறைகளை சொல்லி சரி பண்ண கேளு. அத வுட்டு புட்டு சும்மா கொடச்சல் கொடுத்திக்கிட்டே இருந்த அப்புறம் தாசு இருக்கும், டவுசர் இருக்காது. ரெம்ப அசிங்கமா பூடும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக