புதன், 24 நவம்பர், 2010

Bihar சட்டசபைத் தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்கு மிகப் பெரும் வெற்றி கிடைத்துள்ளது

Nitish Kumarபீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்கு மிகப் பெரும் வெற்றி கிடைத்துள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 158 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. மொத்தமே 5 தொகுதிகளில் மட்டுமே அது முன்னணியில் உள்ளது.
முன்னணியில் உள்ளது. லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மனைவியான முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி ரகோபூர் மற்றும் சோனீப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் ரகோபூரில் அவர் முன்னணியில் இருக்கிறார். ஆனால் சோனீப்பூரில் பின்தங்கியிருக்கிறார்.

இதுவரை மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 217 தொகுதிகளின் முன்னணி தெரிய வந்துள்ளது. அதில், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணிக்கு 158 இடங்களிலும், லாலுவின் கூட்டணிக்கு 40 இடங்களும், காங்கிரஸ் 5 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. மற்றவர்கள் 14 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.

மாபெரும் வெற்றி-நிதீஷ் மகா அடக்கம்:

மிகப் பெரிய வெற்றியை நோக்கி ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி சென்று கொண்டிருந்தபோதிலும், அதன் அடையாளம் சற்றும் தெரியவில்லை முதல்வர் நிதீஷ் குமாரின் வீட்டில்.

வீட்டுக்கு வெளியே வழக்கம் போல பாதுகாவலர்கள் உள்ளனர். ஆனால் ஒரு தொண்டர் கூட்டத்தையும் காணோம். வெகுசிலரே வந்திருந்தனர். மேலும் பட்டாசு வெடிப்பது, ஆட்டம் பாட்டம் என எதையுமே காண முடியவில்லை.

வெற்றியை மிக எளிமையாக எதிர்கொண்டு வருகின்றனர் நிதீஷ்குமாரும் அவரது கட்சியினரும்.

அதேசமயம் பாட்னாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் பட்டாசுகளை வெடித்து அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

நிதீஷுக்கு முழுப் பங்கும்-காங்கிரஸ்:

பீகார் சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதள கூட்டணிவெற்றி பெற முழுக் காரணமும் நிதீஷ்குமார்தான் என்று கூறியுள்ளது காங்கிரஸ்.

இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கூறுகையில், இத்தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. நல்ல அடித்தளத்தைப் பெற வேண்டும் என்பதற்காகவே தனித்துப் போட்டியிட்டோம்.

பீகார் தேர்தல் வெற்றிக்கு நிதீஷ்குமார் மட்டுமே காரணம். அவரது தலைமையில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது மிகப் பெரிய தோல்வி என்றாலும் கூட தனித்துப் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்பதால் அதை தலைமை நிறைவேற்றியது. எதிர்காலத்தில்சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ஜெயந்தி நடராஜன்.

ராகுலுக்கு பெரும் பின்னடைவு:

உ.பியைப் போலவே பீகாரிலும் காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்த கடுமையாக முயன்று வந்தார் ராகுல் காந்தி. ஆனால் அவரது கணக்கு பீகாரில் பெரும் தப்புக்கணக்காகியுள்ளது.

மேலும், தேர்தல் பிரசாரத்தின்போது நிதீஷ் குமாரை கடுமையாக சாடி அவர் பேசியதும் சுத்தமாக எடுபடாமல் போயுள்ளது. அதேபோல நிதீஷ்குமாரை சோனியா காந்தியும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதுவும் எடுபடவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும் விமர்சித்திருந்தார்.

அதேசமயம், எனது ஆட்சியின்கீழ் இருந்த பீகாருக்கு ஒரு முறை கூட பிரதமர் வந்ததில்லை. பீகாரும் இந்தியாவில்தான் உள்ளது. இந்த மாநிலத்திற்கு ஒரு பிரதமர் வர வேண்டியது கட்டாயமாகும். ஆனால் நமது பிரதமர் பீகாருக்கு வரவே இல்லை. இப்போது தேர்தலுக்காக அவர் வந்துள்ளார். பிரதமர் வந்தாலும்,வராவிட்டாலும் பீகார் முன்னேறும், நான் முன்னேற்றுவேன் என்று நிதீஷ் குமார் செய்த பிரசாரம் மக்கள் மத்தியில் வெகுவாக எடுபட்டுள்ளது முடிவிலிருந்து தெரிகிறது.

மோடி வராததால் பிழைத்தார் நிதீஷ்:

நிதீஷ் குமார் தலைமைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணமாக, நரேந்திர மோடியை வர விடாமல் தடுத்தது பார்க்கப்படுகிறது. பிரசாரத்திற்கு மோடி வரவே கூடாது என்று ஆரம்பத்திலேயே உத்தரவு போட்டுவிட்டார் நிதீஷ். இதை ஏற்றே ஆகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது பாஜக என்பது நினைவிருக்கலாம்.
பதிவு செய்தவர்: தேவேந்திரர்
பதிவு செய்தது: 24 Nov 2010 1:59 pm
இதைவிட காணாமல் போகும். தமிழகத்தில் காங்கிரசுக்கு இருக்கும் மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையே வெறும் 18 தான். எல்லாம் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் என்று சொள்ளகூடியவர்களின் ஓட்டுகள்தான் இவை. தொண்டர்கள் யாரும் இல்லை. காங்கிரஸ் கட்சியை வளர்க்கிறோம் என்று சொல்லி சோனியாவிடம் கோடி கோடி யாக பணம் வாங்கிகொண்டு கல்லூரிகள், ரியல் எஸ்டேட், பள்ளிக்கூடங்கள் என்று நடத்துகிறார்கள் தமிழக காங்கிரஸ்காரர்கள். இளங்கோவன் போன்றவர்கள் காங்கரஸ் இருப்பது போன்ற விளம்பரம் செய்து மற்ற கட்சிகார்களின் முதுகில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக