வெள்ளி, 26 நவம்பர், 2010

Mullaithivu படையினரின் 16 சடலச்சிதைவுகள் இனங்காணப்பட்டன


முல்லைத்தீவில் தோண்டியெடுக்கப்பட்ட படையினரின் 16 சடலச்சிதைவுகள் இனங்காணப்பட்டன
இறுதிக்கட்ட யுத்த காலத்தில் முல்லைத்தீவு, வல்லிபுனத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் அரச படையினரின் சடலங்கள் புதைக்கப்பட்ட இரு இடங்கள் 60 நிபுணர்கள் அடங்கிய தடவியல் குழுவொன்றினால் நேற்று வியாழக்கிழமை தோண்டப்பட்டு சடலங்களின் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 16 சடலங்கள் இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும்  புலிகள் இயக்க சந்தேக நபர்களிடமிருந்து பெற்ற தகவல்களின் மூலம் இச்சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.முல்லைத்தீவு –  பரந்தன் பிரதான வீதியில் 28 கிலோமீற்றர் தொலைவில், 9 கிலோமீற்றர் தூரத்திலுள்ள  காட்டுப்பகுதியிலுள்ள விக்டர் 1 முகாமில்  இச்சடலங்கள் தோண்டியெடுக்கப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். இப்படையினர் 16.01.2009 ஆம் திகதி கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக மேற்படி சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார். புலிகளின் பிரதிப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் ரட்ணம் மாஸ்டரினால் நடத்தப்பட்ட விக்டர் பேஸ்-1 முகாமில் 8 இராணுவத்தினரும் 18 கடற்படையினரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு மீட்கப்பட்ட எலும்புகளும் சாம்பலும் 24 சாக்குகளில் சேகரிக்கப்பட்டன. இவை கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டு சடலங்களுக்குரியவர்களை உறுதிப்படுத்துவதற்காக தடவியல் சோதனைகள் நடத்தப்படவுள்ளது. - தமிழ்மிரர்  (படம் : லங்காதீப)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக