வெள்ளி, 26 நவம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத 15 கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் பொலிஸாரினால் சுற்றிவளைப்பு

சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த 15 கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களை குற்றத் தடுப்பு பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். இவற்றில் 14 கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்தவை என தெரிவிக்கப்படுகிறது.
சட்ட ரீதியான அங்கீகாரத்துடன் நாட்டில் இரண்டு கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களே இயங்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கேபிள் தொலைக்காட்சி நிறுவனமொன்றை நடத்த வேண்டுமாயின் தொலைதொடர்பு ஆணையகத்தில் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்வாறு அனுமதி பெற்றுக்கொள்ளாத பல கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்கள் நாட்டில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் இயங்கி வரும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைக்காட்சி நிறுவனங்களின் ஊடாக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய நிகழ்ச்சிகள் கூட ஒளிஒலிபரப்புச் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவிற்கு அமைய குற்றத் தடுப்புப் பிரிவினர் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கேபிள் தொலைக்காட்சி சேவையை நடாத்தி வந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக