இலங்கைக்கு 572.28 மில்லியன் ரூபா பெறுமதியான 500 நான்கு சக்கர ட்ரெக்டர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இவை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களின் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு வழங்கப் பட்டுள்ளன. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்த் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விடம் இதனை நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்தார். அமைச்சர்களான ரிஷாத் பதியுத்தீன், டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக