செவ்வாய், 16 நவம்பர், 2010

வரதராஜப் பெருமாளுக்கு அரசாங்கத்தின் வீடு


வட-கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளுக்கு கொழும்பில் அரசாங்கத்தினால் வீடொன்று ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அமைந்துள்ள தொடர்மாடிப் பகுதியில்  உத்தியோகபூர்வ இல்லமாக வழங்கப்படும் தொடர்மாடி வீட்டுத் தொகுதியிலேயே குறித்த வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
சமிட் தொடர்மாடி அமைந்திருக்கும் பிரதேசம் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை என்பன அமைந்துள்ள பிரதேசம் தவிர கொழும்பில் அதி உயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டிருக்கும் ஒரே இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் வரதராஜப் பெருமாள் வெளிநாடுகளில் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு புலம்பெயர் தமிழர்களை அரசாங்கத்தின் பக்கம் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். ஆயினும் அவர் பங்கேற்கும் கூட்டங்களில் பெரும்பாலான தமிழ் மக்கள் அவருக்கு எதிரான கருத்துக்களையே வெளியிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக