செவ்வாய், 2 நவம்பர், 2010

பெண்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்!

மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.

நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.

நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.

சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.

இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக