செவ்வாய், 2 நவம்பர், 2010

சங்கரராமன் கொலை வழக்கு:65 சாட்சிகள் பல்டி



காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை, புதுச்சேரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு, நீதிபதி ராமசாமி முன்னிலையில் நேற்று காலை விசாரணைக்கு வந்தது.கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 24 பேரில் ரகு, சுந்தரேசன் உட்பட, ஏழு பேர் மட்டுமே ஆஜராகினர். மீதமுள்ள 17 பேர் ஆஜராகவில்லை.
இன்று விசாரணையின்போது அரசு தரப்பு சாட்சிகள் 10 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பாலகுமார், நாராயணசாமி, கணபதி ஆகிய மூன்று பேரும் பல்டி அடித்தனர்.
அரசு சிறப்பு வக்கீலாக தேவதாஸ் ஆஜரானார். வழக்கு விசாரணையை வரும் 29 மற்றும் 30ம் தேதிக்கு நீதிபதி ராமசாமி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சங்கரராமன் கொலை வழக்கில் இதுவரை 113 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில், இன்று பல்டி அடித்த மூன்று பேரையும் சேர்த்து, 65சாட்சிகள் இதுவரை பல்டி அடித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக