புதன், 10 நவம்பர், 2010

இராணுவத் தளமாக இயங்கும் பாடசாலை: அலைந்து திரியும் அப்பிரதேச மாணவர்கள்


பூநகரி 4 ஆம் கட்டையி லுள்ள விக்னேஸ்வரா வித்தியா லயம் தொடர்ந்தும் இராணுவத் தளமாக இயங்கி வருவதால் இப்பிரதேச மாணவர்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். அரசபுரம், செம்மன்குன்று, 4 ஆம் கட்டை, தில்லையடி, பள்ளிக்குடா ஆகிய பகுதி களைச் சேர்ந்த மாணவர்களே பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் தமக்கு அருகிலுள்ள விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வியைத் தொடரமுடியாது சுமார் 10கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள பூநகரி மகாவித்தியாலயத்திற்குச் செல்ல வேண்டிய பரிதாபகரமான நிலையில் உள்ளனர். பல மாணவர்கள் இந்தப் 10கிலோ மீற்றர் தூரத்தையும் நடந்தே செல்லவேண்டிய நிலையில் உள்ளனர். அத்துடன் பேருந்து சேவை சீரில்லாததால் இந்த மாணவர்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ள னர். மேலும் காட்டு வீதி, வயல் பாதைகளுக்கூடாக இந்த மாணவர்கள் பயத்துடன் பயணிக்கின்றனர்.  அத்துடன் இந்தப் பகுதியில் நல்ல தண்ணீர் உள்ள கிணறு இந்த விக்னேஸ்வரா வித்தியாலயத்திலேயே அமைந்துள்ளது. 10 கிலோ மீற்றர் கடந்து பூநகரி மகாவித்தியாலத்திற்குச் செல்லும் இந்த மாணவர்கள் அங்கே பல இடையூறுகளைச் சந்திக்கின்றனர். ஆளணி வளம், பௌதீக வளம் என்பன பற்றாக் குறையாக இருப்பதனால் இவர் களின் கல்விச் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படுகின்றது. பருவமழை ஆரம்பித்துள்ள தால் கூரைகளற்ற கட்டடங் களில் இவர்களால் இருக்க முடியவில்லை. எனவே, விக்னேஸ்வரா வித்தியாலயத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கு ஆவன செய்ய வேண்டுமென பாதிக்கப்பட்ட இவர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக