புதன், 10 நவம்பர், 2010

இலங்கை செய்த போர்க் குற்றம் தான் என்ன? தெளிவுபடுத்த பிரிட்டனிடம் கோரிக்கை


தமக்கெதிரான போர்குற்றச்சாட்டுக்கள் எவை என்பதை தெளிவு படுத்துமாறு இலங்கை பிரிட்டனைக் கேட்டுள்ளது. லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் இதுதொடர்பான கோரிக்கையை பிரிட்டன் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. அதில் இலங்கை அரசு எந்தவகையான போர்க் குற்றங்களை இழைத்தது, அதில் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ எவ்வகையான தவறு செய்துள்ளார் என்ற விடயங்களைத் தெளிவுபடுத்து மாறு பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர் திகால ஜெயசிங்க கேட்டுள்ளார். போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ லண்டனில் வைத்தக் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் பிரிட்டனுக்கான பயணத்தை அவர் ஒத்தி வைத்தார். என செய்திகள் வெளி யான பின்னர் இலங்கைத் தூதர கத்தின் கோரிக்கை பிரிட்டன் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கையில் போர்க் குற்றங்கள்,  மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பன தொடர்பான முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அனைத்துலக சுயாதீன விசாரனை ஒன்று தேவையென பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் ஹம்ரூண் தமது நாடாளு மன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக