புதன், 10 நவம்பர், 2010

இலங்கைத் தமிழர் மீள்குடியேற்றம் குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் : கலைஞருக்கு சோனியா கடிதம்!


இலங்கையில் தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் சோனியா காந்தி,”தாங்கள் 8.10. 2010 அன்று எழுதிய கடிதம் கிடைத்தது. அக்கடிதத்தில் 50 ஆயிரம் தமிழர்களின் மீள்குடியேற்றம் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.இலங்கை தமிழர் மீள்குடியேற்றத்திற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழர்களின் மறுவாழ்வு குறித்து இலங்கை அரசுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.தமிழர் பகுதிகளில் சிக்கிய கண்ணிவெடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக