புதன், 24 நவம்பர், 2010

லாலுவை பீகார் மக்கள் நிராகரித்து விட்டார்கள்-காங். கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு இந்த தோல்வி பெரிதல்ல. ஆனால் லாலு பிரசாத் யாதவைத்தான் பீகார் மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி தனது தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பீகார் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பிரேம்சந்த் மிஷ்ரா கூறுகையில், எங்களை பீகார் மக்கள் நிராகரிக்கவில்லை. ஆனால் லாலுவைத்தான் மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர்.

பீகார் மாநிலத்தைப் பொறுத்தவரை நிதீஷ்குமாரின் தலைமை சிறப்பாக இருந்ததால்தான் அவர்களால் வெற்றி பெற முடிந்தது. நிதீஷ் குமாரையும், லாலுவையும் ஒப்பிடவே முடியாது. அதேபோல நிதீஷ்குமாருடன் எங்களையும் ஒப்பிட முடியாது. நிதீஷ் குமாரைப் போன்ற சிறந்த தலைவர் காங்கிரஸுக்கு அவசியம் தேவை.

இந்த தேர்தலில் உண்மையான மோதல் நிதீஷ்குமாருக்கும், லாலுவுக்கும் இடையேதான். நாங்கள் இதில் வரவே இல்லை. எனவே காங்கிரஸுக்கு இது இழப்பு இல்லை, லாலுவுக்குத்தான் பேரிழப்பு. எங்களுக்கு இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்ப வரும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக