புதன், 24 நவம்பர், 2010

தமிழ் கட்சிகளின் அரங்கம், ஜனாதிபதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்கும்

தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதி மற்றும் இந்தியத் தூதுவர் ஆகியோரை எதிர்வரும் தினங்களில் சந்தித்து உரையாடவுள்ளதாக நம்பகமான தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதியையும், வெள்ளிக்கிழமை ஜனாதிபதியையும் சந்தித்து உரையாடவுள்ளனர். இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பிரஸ்தாப பேச்சுவார்த்தைகளின் போது இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் வடக்கு-கிழக்கு மக்களின் இயல்பு வாழ்க்கை என்பன குறித்தே பேசப்படும் என்பதாக தெரிய வந்துள்ளது.
வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்றப் பிரச்சினைகள், அர்த்தமுள்ள வகையிலான மீள்குடியேற்றம், வட-கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலான முன்னுரிமை, அப்பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை மற்றும் சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்புதல், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பிலான கலந்துரையாடல்கள் என்பவற்றை வலியுறுத்திய எழுத்து மூலமான கோரிக்கை ஒன்றும் பேச்சுவார்த்தையின் போது கையளிக்கப்படவுள்ளது.
இவ் விடயங்களில் இந்தியாவின் காத்திரமான பங்களிப்பைக் கோரும் வேண்டுகோள், இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின் போது கோரப்படவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக