வெள்ளி, 19 நவம்பர், 2010

அதிர்ச்சி தகவல்,உலக அளவில் அரிசி, கோதுமைக்கு



உலகை அச்சுறுத்தும் உணவுப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் ‘உலக உணவு மற்றும் விவசாய உற்பத்தி ஆராய்ச்சிக் கழகம்’ மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் பெருகி வரும் மக்கள் தொகை, வாழ்வாதாரத்திற்காக இடம் பெயரும் மக்கள், விவசாய நிலங்கள் குறைந்து வருவது, பணவீக்கம் உள்ளிட்டவை இதற்கு முக்கியக் காரணங்கள்.
 கடந்த 2007 & 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போது விலைவாசி மிகவும் அதிகரித்துள்ளது.

விலைவாசி உயர்வு குறித்த அறிக்கையை வருடத்துக்கு 2 முறை எங்கள் நிறுவனம் அரசுக்கு அளிக்கும். எதிர்காலத்தில் உணவுப் பொருட்களின் விலைவாசி குறித்த கணிப்புகளும் இதில் இருக்கும்.

அதற்கு ஏற்ப அரசும் மக்களும் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை முன்னிட்டு இத்தகைய நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி வரும் 2011 & 2012ம் ஆண்டுகளில் மக்காச்சோளம் மற்றும் கோதுமை உற்பத்தி பற்றாக்குறையாகவே இருக்கும்.

விலைவாசி உயர்வால் அதிக லாபம் கிடைக்கும் பயிர்களான சர்க்கரை, சோயா, பருத்தி, உள்ளிட்ட பயிர்களை விளைவிப்பதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவதும் இதற்கு ஒரு காரணம்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு விலைவாசி 15 சதவீதம் உயர்ந்துள்ளது.
இயற்கை இடர்பாடுகளால் விளைநிலங்களும், விவசாய உற்பத்தியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகளும் தங்களது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு ஏற்றுமதியை குறைத்து கொள்கின்றன.

 உலக அளவில் கோதுமை, மக்காச்சோளம், அரிசி, எண்ணெய் வித்துக்கள், பால் பொருட்கள், சர்க்கரை, இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடந்த மாதம் 5 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக