வெள்ளி, 19 நவம்பர், 2010

மட்டக்களப்பின் பாளையடிவட்டை அதிரடிப்படை முகாம் அகற்றப்பட்டது..!


மட்டக்களப்பு, படுவான்கரை, போரைதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவின் பாளையடிவட்டை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம் அகற்றப்பட்டுள்ளது. கடந்த மாதத்திற்குள் அம்பிலாந்துறை, பொறுகாமம், போரதீவு, பழுகாமம், கொக்கட்டிச்சோலை, வெள்ளாவெளி, குருக்கல்மடம், செட்டிபாளையம், போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை முகாம்கள் அகற்றப்பட்ட நிலையில் அப்பகுதிகளில் பொதுமக்களின் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், கொக்கட்டிச்சோலை, வெள்ளாவெளி ஆகிய முகாம்கள் இன்னமும் அகற்றப்படாத நிலையில் அங்கு படையினர் கடமைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக