வியாழன், 18 நவம்பர், 2010

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நாளை முதலாவது கப்பல் நுழைவு!

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் நாளை வரப்போகும் முதலாவது கப்பலை வரவேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளை பிரதி அமைச்சர் இன்று நேரடியாக சென்று பார்வையிட்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள வைபவத்தில் முதலாவது கப்பல் வரவேற்கப்படும் என்று துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது.பண்டைய பட்டுப் பாதையை நினைவுகூரும் வகையில் பிரித் பாராயணத்துடன் ஒரு வழிகாட்டிப் படகு துறைமுகத்துக்குள் பிரவேசிக்கும். இதையடுத்து முதலாவது கப்பல் துறைமுகத்துக்குள் நுழையும்.
ஜெட் லைனர் கப்பல் மற்றும் இலங்கை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான மற்றொரு கப்பல் என்பனவும் நாளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக