ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தின் தலைவராகவும் மேம்பாட்டு இயக்குனராகவும் பதவியேற்றுள்ளார் சன் தொலைக்காட்சி குழுமத்தின் அதிபர் கலாநிதி மாறன்.ஊடகத்துறை உட்பட தமிழ் நாட்டின் பல முன்னணி வர்த்தங்களைத் தன்வசம் கொண்டுள்ள கலாநிதிமாறன், ஸ்பைஸ் ஜெட்டின் மொத்த பங்குகளில் பெரும் பகுதியினை 38.6 % வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தின் மேம்பாட்டு இயக்குனராக பொறுப்பேற்றார் கலாநிதி மாறன்.மேலும் அதன் நிர்வாகத்திற்குப் புதிதாக 5 இயக்குனர்களையும் அவர் நியமித்தார். இதனையடுத்து முன்னைய இயக்குனர் குழு ராஜினாமா செய்தது.கலாநிதி மாறன் ஸ்பைஸ் ஜெட்டின் தலைவராக முழுப் பொறுப்பையும் ஏற்றுள்ளார்.
இதனை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மும்பைப் பங்குச் சந்தைக்கு நேற்று முறைப்படி அறிவித்தது.தமிழக தொழில் அதிபர் ஒருவர் முன்னணி விமான சேவையின் உரிமையாளர் மற்றும் தலைவராக பொறுப்பேற்றிருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.
குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட், இந்தியாவின் மிகவும் இலாபகரமான விமானசேவை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் இந்நிறுவனம் விமான சேவைகளை வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக