வியாழன், 18 நவம்பர், 2010

கோட்டையை நோக்கி பேரணி: கிராம கோவில் பூசாரிகள் பேரவை

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஜனவரி 27ந் தேதி கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் சென்னை கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று பேரவையின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம் கூறினார்.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் நிர்வாக அறங்காவலர் வேதாந்தம்,

அனைத்து பூசாரிகளுக்கும் பாகுபாடின்றி தமிழக அரசு இலவச சைக்கிள் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பூசாரிகள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தற்போது வழங்கப்படும் ரூ750 ரூபாய் ஓய்வூதியத்தை 1500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது போல் நலிவுற்று இருக்கும் இந்துக்கள், பூசாரிகளின் வாரிசுகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.

கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் சார்பில் ஏற்கனவே கலெக்டர் மூலமும், அறநிலையத்துறை இணை ஆணையர் மூலமும் முதல் அமைச்சருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை. அதனால் ஜனவரி 27 ந் தேதி சென்னையில் ஒரு லட்சம் பேருடன் கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக