புதன், 10 நவம்பர், 2010

வெள்ளவத்தை கடற்கரையில் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியது..!


கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று நண்பகல் பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தினை இதுவரையிலும் அடையாளம் காணமுடியாதுள்ளதென தெரிவிக்கும் வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். கரையொதிங்கிய சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 35வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமே கரையொதிங்கியது. அப்பெண் ரோஸ் நிறத்திலான சல்வார் அணிந்திருந்ததுடன் கால்விரலில் மிஞ்சியும் அணிந்திருந்தார். இதிலிருந்து அவர் ஒரு தமிழ்ப் பெண்ணாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக