வியாழன், 4 நவம்பர், 2010

திருமணத்திற்கு முன் ரத்த பரிசோதனை:முதல்வர் அதிரடி

திருமணத்திற்கு முன் ரத்த பரிசோதனை நடத்தும் நடைமுறை அமல்படுத்தப்படும் என ஜார்கண்ட் மாநில முதல்வர் அர்ஜூன் முண்டா தெரிவித்துள்ளார்.
தம்பதிகளுக்கு ரத்த பரிசோதனை நடத்துவதன் மூலம் ஆரோக்கியமான குழந்தைகள் பெற்றெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நவீன ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றார். மாநிலத்தில் 70 சதவீத பெண்கள் அனீமீயா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக