வியாழன், 4 நவம்பர், 2010

விக்ரமுக்கு அனுஷ்கா பொருத்தமில்லையாம்...!



        மதராசபட்டினத்தின் வெற்றியை தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் ‘தெய்வமகன்’ படத்தை இயக்கவிருக்கிறார் விஜய். விக்ரமுக்கு எல்லாவகையிலும் மிகவும் பொருத்தமான நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது அந்தப் படத்தில் அனுஷ்கா நடிக்க மாட்டார் என திரைவட்டாரத்தில் பரவலாகவும் பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகிறது.

  

தனது காஞ்சனாவில் அனுஷ்கா நடித்தால் அசத்தலாக இருக்கும் என நினைத்த லாரன்ஸிடம், இனிமேல் திகில் படங்களில் எல்லாம் நடிக்கமாட்டேன் என கறாராக கூறி மறுத்து விட்டார் அனுஷ்கா. அதன் பிறகு லட்சுமிராயை காஞ்சனாவாக மிரட்ட வைப்பேன் என முடிவெடுத்தார் லாரன்ஸ். அது அனுஷ்கா பிகு பண்ணிய வேற கதை...

இப்போது தெய்வமகனில் அனுஷ்கா நடிக்கமாட்டார் என்றும் அவருக்கு பதிலாக அமலாபால் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அனுஷ்கா ஏன் இதில் நடிக்கவில்லை என்பதற்கான காரணம் மட்டும் இன்னும் தெரியாமலே இருக்கிறது.
சிந்து சமவெளி’யில் சர்ச்சையான கதாபாத்திரத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் அமலா பால். முதலில் அனகா என தனது பேரை மாற்றி மறுபடியும் அமலாவாகவே சினிமாவில் நிலைத்திட நினைத்திருக்கும் அவருக்கு நம்பிக்கை தருவதாகவே ‘மைனா’ அமைந்துள்ளது.

தீபாவளி திரைப்பண்டிகை கொண்டாடும் பிரபு சலமோனின் இயக்கத்தில் உருவான ‘மைனா’ அமலாவின் திரைவாழ்வில் ஒளியேற்றும் என்பதில் சந்தேகம் இல்லை. ‘மைனா’ வின் நாயகனான விதார்த் முதல் அதில் நடித்துள்ள அனைவருக்குமே நல்ல பேரை வாங்கி கொடுக்கும். இதில் குறிப்பாக சிந்து சமவெளியில் அமலாவுக்கும் கிடைத்த திட்டுக்களை எல்லாம் மாற்றி பாராட்டுக்களை வாங்கித் தருவதாய் அமைந்துள்ளது மைனா என்றால் மிகையில்லை.

இதை உண்மையாக்கும் வகையில்தான் அனுஷ்காவுக்கு பதில் அமலா பால் நடிக்கிறார் என்ற தகவலும் உள்ளது. ‘களவானி’ படத்தின் இயக்குனர் சற்குணம் மீண்டும் விமலை வைத்து இயக்கவுள்ள அடுத்தப் படத்தில் அமலா நடிக்கவிருப்பதாக திரைவட்டாரத்தில் கூறப்பட்டுவருகிறது.  இந்நிலையில் விக்ரமுக்கு ஜோடியாக தெய்வமகனில் அமலா நடிக்கிறார் என்பது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ எல்லாம் நலமாக நடத்தால் சரி.  இப்போது எல்லோருக்கும் “தீப ஒளித் தி(பெ)ருநாள் நல்வாழ்த்துகள்”...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக