வியாழன், 4 நவம்பர், 2010

Obama பாதுகாப்புக்கு தினமும் செலவு ரூ. 900 கோடி : மும்பை நகரில் வரலாறு காணாத பாதுகாப்பு

மும்பை : அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகைக்காக மும்பை நகரம் முழுமையாக மாறிவிட்டது. வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒபாமாவின் பாதுகாப்புக்காக, ஒரு நாளைக்கு செலவிடப்படும் தொகை 900 கோடி ரூபாய்.

அமெரிக்க அதிபர் ஒபாமா, தனது மனைவி மிச்சேலுடன் நான்கு நாள் பயணமாக, தீபாவளிக்கு அடுத்த நாள் (6ம் தேதி), மும்பைவருகிறார். ஒபாமாவுடன், அமைச்சரவை சகாக்கள், ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள், உளவு போலீசார், பத்திரிகையாளர்கள் உட்பட மொத்தம் மூன்றாயிரம் பேர் கொண்ட குழு வருகிறது. ஒபாமாவின் வருகையையொட்டி, அதிபருக்கான ரகசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு முன்பாக மும்பை வந்து பாதுகாப்பு வியூகங்களை அமைத்துள்ளனர்.மேலும், அமெரிக்கா வில் இருந்து ஹெலிகாப்டர் கள், கப்பல் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்களுடன் கூடிய பாதுகாப்பு கருவிகள் மும்பை வந்துவிட்டன. தாஜ் ஓட்டலில் தங்கும் ஒபாமா, எந்த அறையில் தங்குகிறார் என்பது ரகசியமாகவைக்கப் பட்டுள்ளது.தாஜ் ஓட்டலில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டனர். தாஜ் ஓட்டல் மற்றும் டிரைடன்ட் ஓட்டல் அருகே பாதுகாப்பு கருதி தடுப்பு வேலிகளை அமைத்துள்ளனர். "ஒபாமாவுடன் செல்லும் மெய்க்காப்பாளர்கள் மட்டுமே கையில் துப்பாக்கி வைத்து இருப்பார்கள், மற்ற அமெரிக்க அதிகாரிகள் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை' என, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

வரலாறு காணாதது: மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மும்பை நகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக உள்ளதா என்பதை பரிசோதித்து பார்க்கும் வகையில், மும்பை நகரில் நாளை ஒத்திகை நடக்கிறது. இதில் அமெரிக்க ரகசிய படைப் பிரிவினர், இந்திய உளவுத்துறையின், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், மும்பை போலீசார், முப்படையை சேர்ந்த வீரர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர். அமெரிக்க விமான போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகளும் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை நகரில், ஒபாமாவின் ஒரு நாள் பாதுகாப்புக்காக மட்டும் ரூ.900 கோடி செலவிடப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தேங்காய் விழக்கூடாது: மும்பை நகரில் ஒபாமா பயணிக்கும் பாதைகளில், சாலையோரமிருக்கும் மரங்களிலிருந்து கிளைகள் ஒடிந்து விழாமலும், தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழாமல் இருக்கவும் உன்னிப்பாக கண்காணிக்கும்படி மாநகராட்சி ஊழியர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அதற்காக மும்பை நகரில் பிரதான சாலைகள் அருகேயிருந்த மரங்களில் நீட்டிக்கொண்டு, எப்போது விழுமோ என்று அச்சுறுத்திக்கொண்டிருந்த கிளைகளையெல்லாம் வெட்டி சுத்தம் செய்து வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகை கொண்டாட் டங்களை விட, ஒபாமாவின் வருகைக்காக மும்பை நகரமே மாறியிருக்கிறது.

ரவி - தோஹா,கத்தார்
2010-11-04 15:27:16 IST
என்னங்கடா பினாத்துறீங்க....900 கோடி ரூபாய்க்கு அப்படி என்னதான் பாதுகாப்பு செஞ்சிருவீங்க? கப்பல், ஹெலிகாப்டர் மற்றும் இதர கருவிகள் எல்லாம் அமெரிக்காவிலிருந்து அவனே அனுப்பினதுக்கப்புறம் எப்பூடிடா ங்கொய்யால? ஒருவேளை பாதுகாப்புக்கு வர்ற போலீசுக்கெல்லாம் பாக்கெட் டிப்ஸ் ஒரு லட்சம் கொடுப்பீங்களோ? அப்படி கொடுத்தாக்கூட ங்கொய்யால 900 கோடிக்கு என்னடா செய்வீங்க? ஒபாமா வந்து இந்தியா நல்லாயிருக்கு, உலகத்துலேயே அமெரிக்காவுக்கு அடுத்து அறிவுள்ளதாயிருக்கு, என் நீண்ட நாள் ஆசை இன்றைக்குத்தான் நிறைவேறியது ன்னு பினாத்திட்டு அப்படியே ஒரு u டர்ன் போட்டு பாகிஸ்தானுக்கு போய் பயங்கரவாதத்த ஒடுக்க இருபது பில்லியன் டாலர் கொடுக்கப்படும் என்று கூவிப்புட்டு ஐ.நா பாதுகாப்பு சபையில இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க எல்லா தகுதியும் இருக்கு..அதனால 2050 ல நிறைவேறும்ணு நக்கல் பண்ணிட்டு போயிடுவான்..அதையே பிடிச்சுக்கிட்டு ஒரு வாரத்துக்கு எல்லா மீடியாவும் நம்மள நொங்கு நொங்குன்னு நோன்கப்ப் போறதுதான் மிச்சம்...ஐயோ சொக்கா...தொள்ளாயிரம் கோடியா...சொக்கா...!! அட ங்கொக்கா மக்கா....ம்ம்ம் வலிக்குது.........
N. Mohamed Ismail - Madurai,இந்தியா
2010-11-04 15:17:00 IST
தேவர் சிலைக்கு ஒன்றரை அணா மாலை அணிவிக்க பத்து லட்சம் ரூபாய் செலவழித்து தனி விமானம், தனி ஹெலிகாப்டர்னு ஜெயலலிதா போறதற்கு இது பரவாயில்லை....
JAFFAR - chennai,இந்தியா
2010-11-04 15:15:45 IST
our indian people paid tax money going wast of money to only person securty purpose. common india wake up this is not good to our country...
ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-11-04 15:04:56 IST
ஒபாமா வந்து என்ன கிழிக்க போறாரு. மக்களோட பணத்த ஏன் இப்படி அழிக்கிரீங்க. காங்கிரஸ் கதி அதோ கதிதான்...
ச. தண்டபாணி - riyadh,சவுதி அரேபியா
2010-11-04 14:59:00 IST
தேவை இல்லாத செலவு, இந்திய வந்து பாகிஸ்தானை பற்றி பேசுவர். அங்கு சென்று இந்தியாவை தாக்குவதற்கு தேவையான ஆயதங்களை கொடுத்து காஷ்மீர் பற்றி பேசுவார். இதுவே அமெரிக்காவின் நிலைப்பாடு. எனவே ஒபாமா வரவு தேவையில்லாத ஒன்று. செலவு தேவையில்லத ஒன்று,...
மாணிக்கவேலு - paris,பிரான்ஸ்
2010-11-04 14:53:57 IST
வருக வருக வருகவே! எங்கள் அமெரிக்க ஜனாதிபதி அவர்களே! உங்கள் வரவு நல்வரவாகுக! உலகெங்கும் உள்ள மனித நேயம் மிகுந்த எங்கள் சகோதர,சகோதரிகளுக்கும், சிறப்புமிகுந்த "தின மலருக்கும்" எங்கள் பொன்னான " தீபாவளி" நல் வாழ்த்துக்கள்....
N. R. Ramachandran - Chennai,இந்தியா
2010-11-04 14:52:13 IST
The President Mr. Obama was elected on great expectations by the people of the United States two years ago. But the recent mid-term elections to the Congress indicates that he has not delivered what he has said at the time of his elections. This mid term election results are a near rout for the President and he has been left in the lurch. Americans are worst affected by unemployment and recession. The anger of the people were reflected in the mid elections for these issues have not been properly addressed. The stimulus package and the health care reforms have had a little impact on the electorates. Hence this expenditure of Rs. 900 per day on his security is considered high when his countrymen are reeling under unemployment, recession and ailing US economy. The mid terms elections results which routed his party is a clear message for himself and his party. He has to reset the terms of his engagement and deliver to the people what he has promised or else he would be the one of the President incumbents who will not run for the second term in office....
நாஞ்சில் மனோ - manama,பஹ்ரைன்
2010-11-04 14:31:55 IST
காசில்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் இந்நிலையில் இதெல்லாம் த்ரீ மச்சின்னு சோனியாவுக்கும் மன்மோகனுக்கும் தெரியாதோ....?!!!...
பெஞ்சமின் பெனிட்டோ மிராண்டா - ராஸ்ஆல்க்ஹைமாஹ்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-04 14:29:03 IST
As a world best ecnomist our honorable Prime Minister will not waste a money without any value reason.We will be rewarded for his arraival in future....
shamu - tung,லாஸ்
2010-11-04 14:23:15 IST
சுல்தானே சாப்பிட்டிக்கு லாட்டேரி அடிக்கிறார், குதிரை அல்வா கேட்குதாம்...
2010-11-04 14:09:05 IST
நாம் பெருமையோடு ப்ரெசிடென்ட் ஒப் அமெரிக்காவை வரவேற்போம், கீபிங் எவர்திங் தள்ளிவைத்து.....
நாதாரி - பாடி,இந்தியா
2010-11-04 13:44:00 IST
மும்பை மக்கள் தீபாவளி பலகாரம் தின்னுட்டு bomb போடலாமா இல்லை அதையும் மாநகராட்சி தடை செஞ்சிடிச்சா....
Haridaas - zurich,சுவிட்சர்லாந்து
2010-11-04 13:42:33 IST
So guys, if our PM is going to some place will you deny that about spending money for security. It is just their money and their President and also please don't forget the terror attack that happend in Mumbai already. That shouldn't happen again for anyone...
christopher - sanaa,ஏமன்
2010-11-04 13:36:16 IST
This is waste of money. Let OBAMA spend & stay in our President's Palace as Guest. No need to waste the money. Or let TATA group spend their money for the security reason. He will spend the time in private hotel on our tax money. What is this ??? Or let our president sit inside her residence, their bodgurads could provide the same set up to our guest. Or agree that india is a rich country & politicians are thives that is still india is in developing status....
albert - nagercoil,இந்தியா
2010-11-04 13:18:25 IST
இங்கு சிலர் ஒபாமா நல்லவர் என எழுதியுள்ளனர். இருந்து விட்டு போகட்டுமே. அமெரிக்ககாரன் ஒரு நாட்டுடன் நேசம் கொள்கிறான் என்றால் , உதவிசெய்வதை போல் பாசாங்கு செய்து பாதாளத்தில் தள்ளி அந்த நாட்டுமக்களை பிச்சைக்காரர்களாய் மாற்றி அந்த நாட்டின் மீது போர்தொடுத்து சுடுகாடாக்கிடதான். எ.க. இராக், தன்னுடயசுய லாபத்திற்கு எதுவேண்டும் என்றாலும் செய்வார்கள் அமெரிக்கர்கள். கேலிகூத்து டா. நூறுநாள் நரியாக வாழ்வதைக்காட்டிலும் ஒரேநாள் புலியாக வாழ சொல்லிய வீரன் திப்பு பிறந்த மண்ணில் கோழைகள் எங்கே இருந்து பிறந்தார்கள்....
kumar - mysoor,இந்தியா
2010-11-04 12:59:55 IST
ஓவரோ over...
prakash - dubai,இந்தியா
2010-11-04 12:58:04 IST
spending so much money for security is criminal waste..by this obamas visit india is not going to gain anything obams administration gives so much aid to pakistan in the name of fighting terror but that aid money was used to help terror against india and obamas administration knows about it,still they never bothered..the way they treated our ex president and ministers when they went to u.s in the name of security and now the way we spend so much money for obamas visit shows we are have still not got over the colonial hang over and we are still push overs......
dvnanru - Singapore,இந்தியா
2010-11-04 12:18:11 IST
900 corer spending per day for security purpose for American President crazy people what a hell is going to do, Everything is waste why Obama is coming to India nobody knows all the agreements has been signed against nuclear deal and etc… , In America So many people are sleeping in the road and lot of unemployment problem no secured life in America no need to concentrate in other country better to concentrate in America and give better life those live in America....
S .CHANDRA BOSE - NELLAI.DUBAIUAE,இந்தியா
2010-11-04 12:15:27 IST
இது தேவையானதா இல்லையா என்பது முக்கியமல்ல! ஒரு நாட்டின் அதிபர் அதிலும் உயர்ந்த பதவில் இருப்பவர் . பாதுகாப்பு அளிப்பது நமது கடமை .வருவது நம் நாட்டிற்கு பெருமையே ....
ராஜா - சென்னை,இந்தியா
2010-11-04 12:14:38 IST
பாஸ் இது யார் செலவு செய்கிறார்கள்? இந்தியாவா இல்ல அமெரிக்காவா? கண்டிப்பாக இந்தியாதான் செலவு செய்யும் என்று நினைகிறேன்....செலவு செய்யும் அனைத்தையும் dd நியூஸ்ல கணக்கு காமிங்க....
து.சுரேஷ் குமார் - ராமநாதபுரம்,இந்தியா
2010-11-04 12:03:29 IST
இவ்வளவு செலவு தேவ இல்லைனாலும்,நம்ம நம்பி வந்த யாரையும் மரியாதையை உடனும், பாதுகாப்புடனும் திருப்பி அனுப்புவது நமது கடமை, இதுதான் நம் நாட்டுக்கு பெருமை....
AJ SINAZ - portகிளாங்செலாங்கோர்த.E,மலேஷியா
2010-11-04 12:02:36 IST
in india many people has no accommodation, has no enough food and various problems that should in resolved by the government india but our day spend to a VIP 9000 juta one day to be safe this which fair...
Tamilan - Doha,கத்தார்
2010-11-04 11:51:54 IST
உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டுக்கு, அதி வேக பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாட்டுக்கு U.N பாதுகாப்பு குழுவில் இடம் தர மறுக்கம் அமெரிக்க அதிபருடைய வரத்து தேவை அற்றது. அவருடைய வருகையால் இந்தியாவிற்கு எந்த பலனும் ஏற்பட போவது இல்லை. அமெரிக்க எப்போதும் இந்தியாவை சந்தேக கண்ணோடுதான் பார்க்கும். அமெரிக்க பொருள்களுக்கு, இந்தியா மிக பெரிய மார்க்கெட் என்பதனால் தான் இந்த வருகை. அமெரிக்க பாகிஸ்தானுக்கு அழித்துவரும் பொருளாதார உதவிகள், இந்தியாவுக்கு எதிராக பயன் படுத்தபடுகிறது என்பதை நன்கு அறிந்தும், இந்தியாவின் எதிர்ப்பை சற்றும் பொருபடுத்தாமல் பாகிஸ்தானுக்கு உதவிகளை மேலும் அதிக படுத்தும் அமெரிக்க அதிபர் வருகையால் எந்த பயனும் இல்லை....
JM SENTHIL - TAMILNADU,இந்தியா
2010-11-04 11:32:02 IST
சாம்சன் கம்பெனி இந்திய (தமிழ்நாடு) வருது 350 கோடி செலவில் 3000 பேருக்கு வேலை ஆனா ஒபாமா இந்திய வறாரு 1000 கோடி நஷ்டம் இந்தியர்கள் ஏழைகள்தான். ஆனா கோழைகள் அல்ல. வா வந்தவரை வரவேற்போம் நன்றி மறவாதே BORN AS POOR PUT NOT AS SLAVE BY இந்தியன்...
M .Senthil - போர்ட்Blair,இந்தியா
2010-11-04 11:31:48 IST
யாரு அப்பன் வீட்டு காசு...
Lucas - Coimbatore,இந்தியா
2010-11-04 11:29:20 IST
இந்த செலவை அமெரிக்க அரசு செய்கிறது....
தமிழ்நேசன் - மஸ்கட்,ஓமன்
2010-11-04 11:15:59 IST
முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பில் கிளிண்டன் இந்தியா வந்தார். அப்போது வாஜ்பாய் கிளிண்டனை வரவேற்க விமான நிலையத்திற்கு வெளியுறவு செயலாளரை அனுப்பினர். பிறகு மறு நாள் கிளிண்டனக்கு குடியரசு தலைவர் மாளிகையில் அரசுமுறை வரவேற்பை அரசு அளித்தது. இது வரலாறு. சென்ற முறை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தபோது பிரதமர் மன்மோகன் சிங் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டத்தில் இருந்தார். உடனே கூட்டத்தை பாதியில் நிறுத்தி விட்டு, விதி முறைகளை மீறி அதிபர் ஜார்ஜ் புஷை வரவேற்க விமான நிலையம் சென்றார் பிரதமர் மன்மோகன் சிங். இதுவும் வரலாறு! ஆகவே, இந்த நிகழ்ச்சியில் இருந்து, இந்தியா காங்கிரஸ் ஆட்சியில் அமெரிக்காவுக்கு அடி பணிந்து விட்டது என்பது தெள்ள தெளிவாகிறது. வாழ்க காங்கிரஸ் ஆட்சி! வளர்க இந்தியர்களின் அமெரிக்க அடிமைத்தனம்!!!!...
நந்தா குமார் - Tokyo,ஜப்பான்
2010-11-04 11:10:12 IST
900 கோடி ஹ்ம்ம் ....... ஐஞ்சு Robo படம் எடுக்கலாம்....
சிங்கம் - குவைத்,இந்தியா
2010-11-04 11:09:12 IST
"அமெரிக்க பார்லிமென்ட் தேர்தலில் ஒபாமா கட்சி தோல்வி" தோல்வியை கொண்டாட இந்தியா வருகிறார்..இவர் ஆட்சிக்கு வந்ததும் உலக பொருளாதாரத்தையே உயர்த்த போறார்னு எல்லாம் தப்பு கணக்கு போட்டுடாங்க, பாவம் இவரும் காமெடி பீஸ் தான்.....
கார்த்திக் கோவிலூர் முத்துபேட்டை - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-04 11:05:40 IST
ஒபாமா ஒரு நல்ல மனிதர்......
இப்னு Siddique - Dubai,இந்தியா
2010-11-04 10:41:44 IST
ஒபாமாவுக்கு இவ்வளவு பாதுகாப்பா?...நம்முடைய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் அமெரிக்கா சென்ற போது இப்படி பாதுகாப்பு அவர்கள் கொடுக்கவில்லை மாறாக ஏர்போட்டில் வைத்து அவரை பாதுகாப்பு காரணங்களுக்காக விசாரணை என்ற பெயரில் கேவலப்படுத்தியதை எந்த இந்திய குடிமகனாலும் மறக்க முடியாது........
siva - tirupur,இந்தியா
2010-11-04 10:30:42 IST
இந்திய தலைவர்கள் அமெரிக்கா போனால் பாதுகாப்பு என்ற பெயரில் டவுசரை கழற்றி சோதனை செய்கிறார்கலாமே உண்மையா?. இந்திய தலைவர்கள் பல முறை அவமானப்படுத்தபட்டிருக்கிரார்கலாமே? அப்படி என்ன தான் இருக்கிறது அமெரிக்காவில்? இந்திய தலைவர்களே, உங்களுக்கு எல்லாம் சூடு சொரணை கிடையாதா? நாங்க எல்லாம் இந்தியா எப்போ வல்லரசு ஆகும்னு ஏங்கிக்கிட்டு இருக்கோம். கையில் ஆகா தலைவர்களே, நீங்கள் எல்லாம் ஆட்சி ஆத்திரத்தை விட்டு போய்விடுங்கள். மோடி மாதிரி ஒரு நல்ல தலைவர் வரட்டும். கடவுளே, இந்தியா வல்லரசு ஆவதை எங்கள் பிள்ளைகளாவது பார்பார்கள?...
சக் - டெல்லி,இந்தியா
2010-11-04 10:23:54 IST
they are not giving the preferrence to us ,they are not minding our Ministers they why we have to waste our money for them....
அமிர்தா - seattle,யூ.எஸ்.ஏ
2010-11-04 10:10:46 IST
ஏழை மக்களுக்கு வீணாகும் தானியங்களை கொடுக்க முன் வராதவர்கள், வெளி நாட்டில் இருந்து வரும் அதிபருக்கு 900 கோடி செலவு செய்வார்களாம் ஒரு நாளைக்கு....
bharathi - villupuram,இந்தியா
2010-11-04 09:47:34 IST
இது தேவை இல்லாத செலவு...
மதி - cbe,இந்தியா
2010-11-04 09:44:30 IST
This is a kind of technical way to consume Indian economy by usa....
குல்பன்சா தாக்ரே - மும்பை,கத்தார்
2010-11-04 09:43:16 IST
900 கோடியில் ஊழல் எவ்வளவு ? ஒபாமா பெயரை சொல்லி நம் நாட்டு மக்கள் பணத்தை திருடும் ஆட்டைய போடும் அரசாங்க திருடர்களுக்கு நல்ல வாய்ப்பு (உயிருக்கு பயந்தவன் எதற்கு ஊரை விட்டு வரணும் ) இந்தியா எப்படி முன்னேறும்? இப்படி போனால் முட்டாள் அரசியல் பயலுக இருக்கும் வரையில்!நாடு விளங்குமா?...
நிலா - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-04 09:43:10 IST
இது வெல்லாம் பெரிய இடது விவகாரம்... மாமனார் மாமியார் குடும்பம் வந்து செல்வது போல... இந்த செலவு ஓகே தான்.....
xyz - Chennai,இந்தியா
2010-11-04 09:34:25 IST
People, please don’t blame others, we should think and elect the right party. This is not in our hand…I think this is waste arguments....
பாலகுமார்.சு - திருச்சி,இந்தியா
2010-11-04 09:23:24 IST
இது கண்டிப்பாக நடக்க வேண்டிய ஒன்று. என்னெனில் இது இந்தியாவின் பாதுகாப்பு பிரச்னை. ஆகவே எல்லோரும் இதனை ஆமோதிக்க வேண்டும்....
கண்சாமியோ பொன்சமியோ - விருதுநகர்,இந்தியா
2010-11-04 09:22:03 IST
இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கதும் கேடு கெட்டதும் ஆகும். ஒரு நாளைக்கு 900 கோடி என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று..நாட்டில் எத்தனயோ நல்ல திட்டங்களை செய்துவிட கூடிய ஒரு தொகை...ஆண்டவனுக்கே வெளிச்சம்....இந்த செலவை குடிமகனாய் நாங்கள் வெறுக்கிறோம். நாங்கள் இந்த செலவை வரவேற்க இல்லை..இதில் எத்தனை கோடிகள் எவன் எவன் எத்தனை கேடிகள் அடிக்கிறானோ????ஒரு திருவிழா விளையாட்டு போட்டி நு வச்சாலே ஏப்பம் விட்டு வெளி நாடு ஓடிறான்..இதுல என்ன என்ன கூத்து நடக்குமோ....மக்களாகிய எங்கள் வரி பணம் இப்படி சூரையாடப்படுவதை எங்கள் கண்ணால் பார்க்கும் துர் பாக்கியம் எங்களுக்கு.....தெய்வமே.........
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-04 09:18:40 IST
இது முற்றிலும் பொய்...பாதி பணத்தை நம்ம சில பெருச்சாளிகள் கொள்ளை அடித்து இருப்பார்கள்...ஒபாமா இந்தியவில் இருந்து திரும்பி போனவுடன் ஒரு நியூஸ் வரும் பாருங்க பேப்பரில். ஒபாமா வருகையின் செலவு கணக்கில் 400 கோடி ரூபாய் சுருட்டல்...வீடு வீடாக C B I விசாரணை.......
நண்டு முருகன் - திருச்சி,இந்தியா
2010-11-04 09:14:14 IST
செலவு எல்லாம் அமெரிக்க தான் பண்ணுது .என்ன நம்ப ஆளு களை கொஞ்சம் உள்ளே விட்டு இருக்கலாம். 900 ரை 9000 ஆக்கி கொஞ்சம் குடும்பம் பொழைத்து இருக்கும் ....
பிரின்ஸ் - துபாய்,இந்தியா
2010-11-04 09:13:47 IST
இது தேவையா ??????????????? இதெல்லாம் யாருடையது இப்படி செலவு செய்யுரிங்க!!!! மக்களே விழிப்புடன் இருங்கள் இந்த செலவு அனைத்தும் உங்க தலைல தான் சுமத்துவாங்க.................
kumar - தமிழ்nadu,இந்தியா
2010-11-04 09:12:17 IST
ஒபாமாவுகு ஒரு சீட் கொடுத்தால் வர்ர எலேக்சென்ல இந்தியால நிப்பாரான்னு கேளுங்க...
கே எஸ் யாதவன் - பட்டுக்கோட்டைதஞ்சாவூர்,இந்தியா
2010-11-04 09:08:47 IST
நம் தமிழ்நாட்டில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சாமானியனின் திருமண செலவை ஒப்பிடும் பொது இதெல்லாம் சும்மா 'ஜுஜுபி மேட்டரு'...
john - chennai,இந்தியா
2010-11-04 08:46:26 IST
super.....super.......
jk - india,இந்தியா
2010-11-04 08:17:34 IST
யோவ் குஞ்சு.., நீ என்ன தான் நெனச்சுட்டு இருக்கற.., எதுக்கெடுத்தாலும் காலஹஸ்தி கோபுரம் தான் உனக்கு நெனவு வருமா...? புள்ள புடிக்கற கோஷ்டிக்கும் கோபுரம் இடிஞ்சு போச்சு ங்கற.., ஒபாமா வந்தாலும் கோபுரம் இடிஞ்சதால தான்னு சொல்ற.., ஆனா ஒன்னு.., கோபுரம் இடிஞ்சதுக்கு இன்டர்நேஷனல் லெவெல்ல காரணம் கண்டுபுடிச்ச விஞ்ஞானி நீர் தானுமையா.., வாழ்க உன் பணி.., தொடரட்டும் நின் இடியாப்ப சேவை.....
namakkal suresh - namakkal,இந்தியா
2010-11-04 08:02:36 IST
இந்த செலவுகளையெல்லாம் வீண் செலவு என்றும், தெண்ட செலவு என்றும் கூறுபவர்களை உலக நடப்பு தெரியாதவர்கள் என்றுதான் கூறவேண்டும்.. நம்மை நம்பி நமது வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு நாம் உபசரித்தல் மட்டும் போதாது அவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதர்க்ககவே ஆகும் செலவு என்றுதான் கருத வேண்டும் என்பதே என் கருத்து. பிழை என்றால் வாசகர்கள் மன்னிக்க வேண்டும்...
கவிஞானசக்ரவர்த்தி - சென்னை,இந்தியா
2010-11-04 07:58:02 IST

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக