யாழ். போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு எயிட்ஸ் தொற்றுக்குள்ளான பெண் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். 20 வயதான இந்த யுவதி தனக்கு எவ்வாறு இந்த எயிட்ஸ் தொற்று ஏற்பட்டது என்பது குறித்து எதுவுமே கூற மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. |
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட வேளையிலேயே இவர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருந்தமை தெரிய வந்துள்ளது. சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் அதாவது 16 வயதளவில் இவர் எயிட்ஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. நீண்ட இடைவேளையின் பின் யாழ் போதனா வைத்தியசாலையில் மற்றுமொரு புதிய எயிட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டமை வைத்தியசாலை வட்டாரங்களில் மிகவும் அவதானமான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக