வியாழன், 11 நவம்பர், 2010

பேஸ்புக்குடனான போட்டி ; ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்தியது கூகுள்

சர்வதேச அளவில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் 10 சதவீத சம்பள உயர்வு அளிக்க கூகுள் இணைதளம் முடிவெடுத்துள்ளதாக வால்ட் ஸ்டீரிட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

கூகுள் நிறுவன உயர் அதிகாரி எரிக் சிமிட், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்அஞ்சலில், கூகுள் நிறுவனம், ஊழியர்களின் கடின உழைப்பை அங்கீகரித்து பாராட்டும் வகையில், சர்வதேச அளவில் பணியாற்றும் 23 ஆயிரம் ஊழியர்களுக்கும் 10 சதவீத சம்பள உயர்வு வழங்கப்படுவதாகவும், இது ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வால்ட் ஸ்டீரிட் நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களில் முன்னணியில் உள்ள பேஸ்புக் நிறுவனம், தற்போதைய அளவில் கூகுள் நிறுவனத்துடன் தொழில்நுட்ப யுத்தத்தில் களமிறங்கியுள்ளது. இந்தப் போட்டியில், தங்கள் நிறுவனம் ஊழியர்களை இழக்காமல் இருக்கவே இந்த சம்பள உயர்வு என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலும் கூகுள் நிறுவன முன்னாள் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக