நடிகர் பிரபுதேவாவின் காதல் மனைவி ரமலத்துக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. (கள்ளக்)காதல் செய்யும் பிரபுதேவாவும், நயன்தாராவும் கணவன் - மனைவி போல ஜோடியாக உலா வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு தடை விதிக்கக் கோரியும், பிரபுதேவாவை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரியும் ரமலத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வருகிற 23ம்தேதி விசாரணைக்கு வரும் நிலையில், நயன் மற்றும் பிரபுதேவாவுக்கு சம்மன் அனுப்பப் பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபுதேவா - நயன்தாரா கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரமலத்துக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது. இந்த கடிதத்தை எழுதியது யார்? எங்கிருந்து அனுப்பப் பட்டுள்ளது? என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் ரமலத் சார்பில் அவரது வக்கீல் புகார் செய்துள்ளார். போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக