வியாழன், 11 நவம்பர், 2010

புலிகளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை வருத்தமளிக்கின்றது : அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலகிளின் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை வருத்தமளிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் மற்றும் அமைச்சரவை ஆகியவற்றை புலிகள் உருவாக்கியுள்ளதாகவும் ஜனநாயக ரீதியில் ஆட்சி பீடமேறிய அரசாங்கமொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப்படும் நிலைமை கவலையளிப்பதாக ஊடக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள ருத்ரகுமாரன் அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய தருணத்தில் அமெரிக்காவுடன் இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுலைப் புலிகளினால் திரட்டப்பட்ட நிதியை பயன்படுத்திக் கொள்வதற்காக இந்த நாடு கடந்த தமிழீழ இராச்சியம் உருவாக்கப்பட்டுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக