கொழும்பில் நேற்று இரவு முதல் பெய்துவரும் பலத்த மழையினால் கொழும்பு நகரின் பெரும்பாலான வீதிகள் வெள்ளநீரில் மூழ்கிக் கிடப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. இதனால் கொழும்பின் எட்டியாவத்தை - கொட்டாஞ்சேனை ,வஜிரா வீதி, ஹெவலொக் வீதி, ஆயுர்வேத சந்தி, பௌத்தலோக்க மாவத்தையின் சில பகுதிகள், மருதானை, வோர்ட் பிளேஸ் மற்றும் புறநகர் பகுதிகளிலும் பல வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் கடந்த 18 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக 400 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று காலை 7.00 மணிவரை பெய்துள்ளமை பதிவாகியிருப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை இன்று மாலைவரை தொடரும் எனவும் இடி, மின்னலின் தாக்கம் காணப்படும் எனவும் பொது மக்கள் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக