வியாழன், 11 நவம்பர், 2010

அகதிகளுக்கு எதிரான சட்டமூலத்தை இயற்றுவதற்கு கனடா அரசை தள்ளியதும் புலிகளின் ஏஜன்டுகள்

புலம்பெயர் நாடுகளில்
அடையாளப்படுத்தும் அடையாள அட்டை
(சாகரன்)
கட்டாய நிதிச் சேகரிப்பு, சிறுவர்களை படையணியில் இணைத்தல், பொது மக்களையும் அரசியல் தலைவர்கள் கல்விமான்களை கொலை செய்தல் என்பன வெளிநாடுகளில் புலிகளை தடைசெய்ய முக்கிய காரணமாக இருந்தன. கவனிக்க மாற்றுக் கருத்தாளர்களை கொன்றார்கள் கொல்கின்றார்கள் என்பதுவோ அல்லது முஸ்லீம், தமிழ், சிங்கள் மக்களை இப்பாவி மக்களை கொல்கின்றார்களோ என்பது முதன்மைப்படவில்லை. மாற்றுக்கருத்தாளர்கள் இடதுசாரி சிந்;தனைவாதிகளாகவும் ஏகாதிபத்திய எதிர்ப்புவாதிகளாகவும் இருந்தது காரணம்.
492 பேர் 'வெற்றி' கரமாக கடலால் புலிகளின் கப்பலில் கொண்டுவந்து இறக்கியது, ஒட்டுமொத்த (தமிழ்) அகதிகளுக்கு எதிரான சட்டமூலத்தை இயற்றுவதற்கு கனடா அரசை தள்ளியதும் புலிகளின் ஏஜன்டுகள் செய்துகொண்ட கைங்கரியம். முந்திக் கொண்டு அகதிகளுக்காக பேச முற்பட்டதும், நிதி சேகரித்தததும் கப்பலில் வந்த அகதிகளை தமிழ் காங்கரஸுக்களும், தமிழ் பேரவைகளும் இவர்கள் புலிகளின் அணியில் உள்ளவர்கள் என்ற சந்தேகங்களை வலுப்பெறச் செய்தன. தமிழ் காங்கரஸுக்களும், தமிழ் பேரவைகளும் புலிகளின் பினாமி அமைப்புக்கள் என்று சொல்வதை நம்ப என்ன வெளிநாட்டு அரசுகள் கேணப் பயல்களா........?
இன்றும் அன்றும் புலம் பெயர் தேசத்து பல்கலைக் கழகங்களில் எங்கள் குழந்தைகள் சிலரை உசுப்பேத்தி பல்கலைக் கழக படிப்பு முடிக்கும் போது கட்டாயமாக இரண்டாவது பட்டத்தையும் பெறச் செய்த பெருமையும் இவர்களையே சாரும். மே 18, 2009 இற்கு பிறகு இவர்கள் திருந்துவார்கள் என்றால் இல்லை என்பது போலவே தோன்றுகின்றது. அண்மையில் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அடையாள அட்டை விநியோகம் இதனையே எடுத்துக்காட்டுகின்றது. எமது பிள்ளைகள் பல்கலைக் கழகத்தால் வெளியே வருமுன்பே பயங்கரவாதி என்ற பட்டத்தை பெற்றுக் கொடுப்பதே இதன் நோக்கம் போலும். அடையாளப்படுத்தும் அடையாள அட்டை நிகழ்வுகள் இதனையே எடுத்துக்காட்டுகின்றன.
பெற்றோர்களே விழிப்படையுங்கள். உங்களில் பலர் விழிப்படைந்து விட்டீர்கள் என்பது மே 18 2009 இற்கு பிந்தைய வெளிநாட்டு புலிகளின் நிகழ்சிகளை புறக்கணிப்பதிலிருந்து அறியக் கூடியதாக இருக்கின்றது. புலிகளின் போராட்டம் புலம் பெயர் தேசத்தில் தமிழ் சமூகம் ஒரு கௌரவமான சமூகமாக காட்டப்படுவதை நிறுத்தி 'நம்பிக்கையற்ற' சமூகம் என்ற பெயரை 'சகல' தமிழ் மக்களுக்கும் வாங்கக் கொடுத்திருக்கின்றது. கடன் அட்டை மோசடி, கட்டாய நிதி சேகரிப்பு, வன் செயல்களில் ஈடுபடுதல். ஏகபோகத்தை இலங்கையிலும், புலம் பெயர் தேசங்களிலும் நிறுவுதல் போன்றவை இவற்றிற்கு காரணமாக அமைந்தன. இதனை நிலை நிறுத்துவதில் புலிகளுக்கு சார்பான புலம் பெயர் தேசத்து ஊடகங்கள் நன்றாகவே செய்து வருகின்றன.
எனவே பெற்றோர்களே விழிப்டையுங்கள் உங்கள் பிள்ளைகளை காப்பாற்றுங்கள். அன்றேல் உங்கள் பிள்ளைகள் பல்கலைக் கழக பட்டத்தை சிலவேளை தவறவிட்டாலும், பயங்கரவாதி பட்டத்துடன் உங்கள் பிள்ளைகள் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறி பின்பு சிறைக் கூடங்களுக்குள் அடைக்கப்படலாம். மே 18 பிந்தைய காலகட்டத்தில் உங்களில் பலர் 'தெளிந்து' விட்டது தெரிகின்றது. ஆனாலும் சில மயங்கங்களை சிலர் தொடர்ந்தும் ஏற்படுத்தியே வருகின்றனர்.
தேசியத்தை காட்டி நிற்க தேசியத் தலைவரை அழைப்பது அவமானம். மாறாக தமிழருக்கு இருக்கும் பெருமைப்படக் கூடிய (கூட்டுக்)ுடும்ப வலிமை, மூத்தோரை மதித்து வணங்குதல், ஆண், பெண்களிடையேயான மரியாதை உறவுகள், விருந்தோம்பல், கடின உழைப்பு, சிக்கனவாழ்வுடன் கூடிய சேமிப்பு, நேர்மையாக செயற்படுத்தல், மனிதாபிமானம், கலாச்சார, மத விடயங்களில் தூய்மையாக செயற்படுதல், பண்டிகைகளை சந்தோஷங்களுக்காவும், ஒன்று கூடி மகிழ்வதற்காகவும் (வியாபாரத்திற்கு என்றில்லாமல்) கொண்டாடுதல் போன்ற பல நல்ல விடயங்களை எமது பாரம்பரிய பழக்கவழக்கங்களின் அரிசுவடுகளிலிருந்து எடுத்துக்காட்டுங்கள். செயற்படுத்தி நில்லுங்கள். மேலும் நல்ல இயற்கையான சுகாதாரம், இயற்கையை போற்றிப் பாதுகாத்தல், அதனை வணங்கி நிற்றல், இயற்கை மூலிகளை, உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருத்தல் என்பனவற்றை முன்நிறுத்தி செயற்படுங்கள் தேசியம் தன்னை அடையாளப்படுத்தி தானாக வளரும்.
மாறாக விருந்தோம்பல் மூலமே கொலை செய்யும் வக்கிரப்புத்தியுள்ள பிரபாகரனை இழுத்து தமிழ் மக்களின் தேசிய அடையாளங்களை கொச்சைப்படுத்தாதீர்கள். இலங்கையில் மூன்றில் இரண்டு கடற்பரப்பை தமிழீழ வரைபடத்தில் காட்டி  இன்று 'நிலாவரை' வரை திட்டமிட்ட குடியேற்றங்களுக்கான வலுவற்ற நிலைகளை தமிழர் தரப்பிற்கு ஏற்படுத்திவிட்டு மண்ணோடு மண்டியிட்டதே புலிகளின் தமிழீழத் தாகம். வெறும் கொக்கரிப்புகளை புலம்பெயர் தேசங்களிலிருந்து செய்வதன் மூலம் முழுத் தமிழ் இனத்தையும் மேலும் பலவீனப்படுத்தாதீர்கள். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மனிதாபிமான 'Air Campain' செய்யும் மேற்குலகம் இலங்கை அரசின் பிழையான செயற்பாடுகளை களைந்து இலங்கையில் உள்ள சகல இனங்களும் சமத்துவத்துடன் வாழும் வாழ்வை உறுதிப்படுத்தி தரும் என்ற முட்டாள் தனமான நினைப்பில் இருக்காதீர்கள். மேற்குலகம் நோர்வேயை முன் நிறுத்தி தவிர்க்க முடியாமல்உதவிசெய்ய புறபட்டு ஒஸ்லோ நடவடிக்கையுடன் எல்லாவற்றையும் போட்டுடைத்து முள்ளிவாய்காலில் முழந்தாளிட்டு சரணடைந்ததும் புலிகளால் சாய்த்து செல்லப்பட்ட பல ஆயிரம் மக்களையும் பலயெடுத்தும், பலி கொடுத்தும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்திய அனுபவம் எங்களுக்கு இருக்கல்லவா?
மீண்டும் ஒரு முள்ளிவாய்கால் நிகழ்வை அரங்கேற்ற புலம் பெயர் தேசங்களில் (ஆயுள், படிப்பு, மரணச்சடங்கு...)ாப்புறுதி, கார், வீடு, வாசல் போன்றவற்றை தேடி வைத்துக்கொண்டு இவை ஏதும் இல்லாமல் கிடைத்திருக்கும்வேட்டுஅற்ற நிலமைகளைப் பாவித்து தேடுதலில் ஈடுபட்டிருக்கும் இலங்கைவாழ் தமிழ் மக்களை மீண்டும் ஒரு முள்ளிவாய்காலை நோக்கி சாய்த்துச் செல்லும் நிலைக்கு தூபம் இடாதீர்கள்.
கனடாவிலுள்ள பல்கலைக் கழகம் ஒன்றில் புலிப்பினாமிகளால் ஏவி விடப்பட்டவர்கள் செய்த அடையாள அட்டை கைங்கரிய செய்திகளையும் படங்களையும் கீழே தருகின்றோம். செய்திகள்,படங்கள் மூலம் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுங்கள். இவ் நிகழ்வை பல தமிழ் பல்கலைக் கழக மணிகள் நிராகரித்தது அவர்களின் 'தெளிந்த' நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது.
செய்தியும், புகைப்படங்களும் இதோ:
டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழீழ தேசிய அடையாளங்களை முதன்மைபடுத்தும் ஆரம்ப நிகழ்வு
இந்தக் கல்வியாண்டிற்கான அங்கத்தவர் அட்டை மற்றும் மேல் ஆடை  ஆகியவற்றை வெளியிடுவதில் UTSC TSA இன்    நிர்வாக அவை மற்றும் இயக்குனர் குழுமம் ஆகியன மகிழ்வுகொள்கின்றன. தமிழ் அடையாளத்தின் அங்கங்களான தமிழ்மொழி, கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றைப் பாதுகாப்பதில் UTSC TSA நம்பிக்கை கொண்டுள்ளது. தன்னிகரில்லா தலைவரின்கீழ்  தமிழ் அடையாளம், மொழி, மற்றும் கலாச்சாரம் ஆகியவை தமிழுலகம் முழுவதும் வளர்ச்சிகண்டுள்ளன. இந்த தமிழ் அடையாளத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்வதில்  தலைவரின் வளமான உத்வேகம் அளிக்கும் வார்த்தைகள் அடிப்படைத்தேவையானவை  என்பதை UTSC TSA உணர்ந்துள்ளது. கீழுள்ள தலைவரின் மேற்கோள் 2010-2011 UTSC TSA அங்கத்தவர் அட்டைகளில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது:
எமது நாட்டின் கட்டமைப்பை தாங்கும் தூண்களாக கல்வி, மொழி, கலாச்சாரம் மற்றும் நிலம் ஆகியவை விளங்குகின்றன.”
தமிழீழ தேசிய தலைவர்.

இந்த தேசியத்தலைவரின் சிந்தனையானது, எமது தாய்நாடு தமிழீழத்தின் பலமான கட்டமைப்புக்குத் தேவையான நான்கு அடிப்படையான காரணிகளை எடுத்துக்காட்டுகின்றது.
இந்த
ஆண்டின் அங்கத்தவர் அட்டைகளோடு, UTSC TSA ஆனது, கனடாத்தமிழ் இளைஞர்களின் சிறப்புரிமைகளை வேறுபடுத்தி அடையாளம் காணவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. நீலநிற மேல் ஆடை முன்புறத்தில் UTSC TSA என்பதோடு சேர்த்து கனடா வரைபடமும்எமது வீடுஎன்ற வாசகமும் அதேவேளை மேல் ஆடை பின்புறத்தில் தமிழீழ வரைபடத்தோடு கூடியஎமது நாடுஎன்ற வாசகமும் சித்தரிக்கபட்டுள்ளது. இந்த ஆண்டின் டீ-சேர்ட்டானது கனடா தமிழ் இளைஞர்களின் தனித்தன்மைக்கு பங்களிக்கும் இரு நாடுகளையும் வெளிப்படுத்திநிற்கின்றது.

கனடாத்தமிழ் இளைஞர்களின் வல்லமைகளையும் மனங்களையும் உருவமைப்பதில் கனடா மற்றும் தமிழீழம் ஆகிய இரு நாடுகளும் பெரும்பங்காற்றுகின்றன. எனவே
இரு நாடுகளையும் பாராட்டிப்போற்றல் அத்தியாவசியமானது. சாரமாக, தனது உறுப்பினர்களுக்கு, வளம்பொருந்திய தமிழ்மொழி, கலாச்சாரம், மற்றும் வரலாறு ஆகியவற்றை கற்பிக்கும் கடமையை UTSC TSA எடுத்துக்கொண்டுள்ளது. அத்தோடு தமிழீழத் தேசியத் தலைவரின் வார்த்தைகளை  மனதில் நிறுத்தி, எதிர்வரும் வருடங்களின் முன்னேற்றத்துக்காக விடாமுயற்சியுடன் செயல்படும் என்று
UTSC TSA உறுதிபூணுகின்றது.
(சாகரன்) (கார்த்திகை 11, 2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக