வியாழன், 11 நவம்பர், 2010
மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் நெப்போலியன்
அரசியலில் தீவிரம் காட்டத் தொடங்கியதில் இருந்து சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கிய நடிகர் நெப்போலியன் சமீப காலமாக சினிமாவுக்கு குட் பை சொல்லி வந்தார். அதிலும் மத்திய அமைச்சர் ஆன பிறகு சினிமா பக்கம் எட்டிப்பார்க் நேரமில்லை என்று அவரே தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ் சினிமாவில் நடிக்கப் போகிறார். புதுமுகங்கள் நடிக்கும் பள்ளிகொண்டாபுரம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கவிருக்கிறார் நெப்போலியன். மீண்டும் நெப்போலியன் சினிமாவில் கமிட் ஆகியிருக்கும் தகவலை கேள்விப்பட்ட சில இயக்குனர்கள் தங்களது படத்திலும் நடிக்குமாறு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். ஆனால் நெப்போலியன் வேறு எந்த படத்திற்கும் யெஸ் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக