வியாழன், 11 நவம்பர், 2010

சிக்கு புக்கு’ விளப்பரத்திற்கு ஒரு ஹைலைட் பிளான்



       லண்டனில் தொடங்கி காரைக்குடியில் முடியும் காதல் பயணமான ‘சிக்கு புக்கு’ நவம்பர் 19ல் வெளியாகவிருக்கிறதாம்.வழக்கமாக படம் வெளியாவதற்கு முன் பலவகையிலும் விளம்பரப்படுத்துவார்கள்.  அந்த வகையில் இந்தப் படத்தின் விளம்பரத்திற்காக தனி இணைய தளம் ஒன்றை உருவாக்க இருக்கிறாராம் இயக்குனர் கே. மணிகண்டன்.    


ஆர்யா, ஸ்ரேயா மற்றும் அறிமுக நாயகியான ப்ரீத்திகா ராவ் மூவரிடையே நடக்கும் ரொமான்ஸ் கலகலப்பான சிக்கு புக்கு படத்தின் இசை சேர்ப்பு ‘கலோனியல் கஸின்ஸ்’ ஹரிஹரன் & லெஸ்லி.

மெஜஸ்டிக் மல்டி மீடியா லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியிடுகிறது.

படத்தின் பிரத்யேக ஸ்டில்ஸ், படம் குறித்த சிறப்பு அம்சங்கள் ஆகியவற்றின் தொகுப்பாக இந்த இணைய தளம் அமையவுள்ளதாம். நவீன கால விளம்பர யுக்தியாக பல படங்களுக்கென தனி இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து சற்றே சிறப்பாக,  படம் தொடங்கிய காலகட்டம் முதல் படம் குறித்த அத்தனை சிறப்புத் தகவல்களையும் சுவாரசியமாக தர திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடுகிறார் மணிகண்டன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக