வியாழன், 25 நவம்பர், 2010

பகுத்தறிவு பற்றி கருணாநிதி பேசுவதா? ஜெ., கிண்டல்

"பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுவது நகைப்புக்குரியது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: ஈ.வெ.ரா.,வின் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர் என தனக்குத் தானே தம்பட்டம் அடித்து, தஞ்சை பெரிய கோவிலின் பிரதான வாயில் வழியாகச் சென்றால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், பின்பக்க வாசல் வழியாக செல்லும் கருணாநிதி; ஜோதிடரின் சொல்லுக்கு இணங்க மஞ்சள் துண்டை அணிந்துகொள்ளும் கருணாநிதி; ஈ.வெ.ரா.,வின் கொள்கை குறித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றவுடன், குடும்பத்துடன் திருக்குவளைக்குச் சென்று, குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் சாமி தரிசனம் செய்தது, கோவில் கும்பாபிஷேகங்களில் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்வது, வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்கள் பின்னால், தன் குடும்பத்தினர் சுற்றுவது - இவற்றை எல்லாம் மறந்து, பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுவது நகைப்புக்கு உரியது.

அண்ணாதுரையால் துவங்கப்பட்ட தி.மு.க.,வை பணக்கார இயக்கமாக மட்டுமல்லாமல்; குடும்ப இயக்கமாகவே மாற்றிய பெருமை, கருணாநிதியையே சாரும். இன்று, தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவியை பெறுவதற்கும், சொத்து களைக் குவிப்பதற்கும் தானே தி.மு.க.,வை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார்? முன்னாள் பிரதமர் இந்திரா மதுரை வந்தபோது, அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திவிட்டு, அவருக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தை, பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் வகையில் கொச்சைப்படுத்திவிட்டு, "நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக' எனக்கூறியதும், விதவை ஓய்வூதியத் திட்டத்துக்கு இந்திரா விண்ணப்பித்தால் பரிசீலிக்கத் தயார் என தி.மு.க., அறிவித்ததும்; காமராஜ், கக்கன், ராஜாஜி என அனைத்து தலைவர்களையும் கருணாநிதி வசைபாடியதும், ராஜிவ் கொலை வழக்கில் சந்தேகத்தின் நிழல் கருணாநிதி மீது படிந்திருக்கிறது என ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியதும், மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

ஸ்பெக்ட்ரம் வழக்கை நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து வந்த சி.பி.ஐ., அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், இந்த மாறுதலில் கருணாநிதியின் தலையீடோ, தி.மு.க.,வின் தலையீடோ நிச்சயம் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்காது. சூழ்நிலைச் சான்று தான் இதற்கு ஆதாரம். இப்போது, தொலைத்தொடர்புத் துறைச் செயலராக இருந்தவரே மத்திய விஜிலென்ஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதிலும் கருணாநிதியின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம், மக்கள் மனதில் தற்போது ஏற்பட்டு உள்ளது. நிரா ராடியா உரையாடல்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, கருணாநிதி இதுவரை வாய் திறக்கவில்லை. இதேபோல, ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடே கொந்தளித்துக்கொண்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவரை கனிமொழி ரகசியமாக சந்தித்துள்ளதாக செய்தி வந்துள்ளது. இதன் மர்மம் என்ன என்பது குறித்து கருணாநிதி இதுவரை விளக்கவில்லை.இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
gvass - chennai,இந்தியா
2010-11-25 09:33:52 IST
தமிழன் சொரணை கெட்டவன்.இவனை தமிழ், திராவிடம், அண்ணா, பெரியார் மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு என்று நன்றாக எமாற்றலாம் என்பது மஞ்ச துண்டின் கனவு. இனி யாரும் ஏமாறத் தயாரில்லை. இவர் பின்னே போகிறவர்கள் தமிழின துரோகிகள், சுயநல வாதிகள்....
mohan - chennai,இந்தியா
2010-11-25 09:28:55 IST
அம்மா சொனனதுள எந்த தப்பும் இருக்கா மாதிரி தெரியல...இவ்வளவு பேசுற கலைனர் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு செல்லும் பொது முன் வாசல் வழியாக செல்ல வேண்டியது தானே. . ....
hmj - Delhi,இந்தியா
2010-11-25 09:26:47 IST
திரு kk அவர்களே.. தயவு செய்து மத பிரச்சனையை கிளப்பாதீர்கள். இந்தியா இப்போது தான் நிம்மதியாக மத பாகு பாடின்றி உள்ளது. உங்கள் பேச்சில் நியாயம் இல்லை....
ரவி - Hosur,இந்தியா
2010-11-25 09:10:52 IST
அவர் இயற்பெயர் தக்ஷினாமூர்த்தி, தக்ஷினாமூர்த்திக்கு மஞ்சள் ஆடை அதுவில்லாமல் அவர் பிறந்த தேதி 3 அதுவும் தக்ஷினாமூர்த்தி பின் இதுதான் மஞ்சள் துண்டின் தாத்பர்யம்....
rohinee - Srilanka,இலங்கை
2010-11-25 09:00:39 IST
kk-surat, இந்தியா Thanks for your comment....
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-25 08:21:56 IST
இந்த அம்மா இதை பற்றி பேசக் கூடாது. நீர் நம்ம அண்டை நாட்டுக்கு போய் யானை குட்டி காணிக்கையாக கொடுக்க வில்லையா? எல்லாரும் ஒரு குட்டையில் ஊறுன மட்டைதானே...
ரங்கராஜ் - eerodu,இந்தியா
2010-11-25 08:19:28 IST
மஞ்சள் துண்டு மடாதிபதி என மறைந்த நெடுஞ்செழியன் கூறியது சரியே...
வினோத் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-11-25 08:17:11 IST
கைப்புள்ள உங்கள் கருத்துகள் அருமை. என்ன செய்வது நாம் எல்லோரும் இப்படி ஆகிவிட்டோம். நாடு முன்னேற ஏதாவுது செய்ய வேண்டும்....
நல்லவன் - jedhdhah,சவுதி அரேபியா
2010-11-25 08:09:08 IST
அண்ணா பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கும்பிடுவது எந்த பகுத்தறிவு? மஞ்சள் துண்டுக்கு தாத்தா கொடுத்த விளக்கங்கள் நல்ல நகைச்சுவை விருந்து. அவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது நகைச்சுவையில் உச்சம். இதுபோன்ற கோமாளிகள் அரசியலில் சாதிக்கிறார்கள் என்றால் அது அவர்களுக்கு பெருமையல்ல. அவர்களுக்கு வோட்டு போடுபவர்கள் அதைவிட கோமாளிகள் என்றுதான் பொருள். இங்கு எழுதும் நண்பர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். "தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்" என்ற நூல் தொகுப்பை படித்துப் பாருங்கள். அண்ணாவின் சிந்தனைகள் மிகவும் பாமரத்தனமானவை என்று புரியும்....
செல்வன் - கோவை,இந்தியா
2010-11-25 07:57:51 IST
kk - surat,இந்தியா, உங்களது கருத்து மிகவும் அருமை. உண்மையில் என் கண்ணை திறந்தது. வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி...
மோகன் ராஜ் - chennai,இந்தியா
2010-11-25 07:46:49 IST
அம்மா சொன்னது சரிதான். பெரியார் கட்சியை சேர்ந்த கருணாநிதி, கோவிலுக்கு செல்வதும் சாமி கும்மிடுவதும் தப்பு. உலகத்துலேயே பெரிய கொள்ளைக்கார குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். அம்மா நீங்க தான் தமிழ்நாடை காப்பாத்தனும். அம்மா வாழ்க!!!! இலவச கலைஞர் ஒழிக!!!!. கலைஞரே அடுத்த சம் அம்மா தான். உமக்கு மட்டும் இல்ல உம் குடும்பத்திற்கே ஆப்பு காத்திருக்கு. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும். அதே போல் தப்பு பண்ணவன் தண்டனை பெற்றே ஆக வேண்டும். இப்படிக்கு தமிழகத்தை அழிவுலிருந்து மீட்க போகும் அம்மாவை நோக்கி தமிழ் நாடு மக்கள்....
jopet - singapore,சிங்கப்பூர்
2010-11-25 07:39:43 IST
அதிமுக அதிபுத்திசாலிகளே! கலைஞர் இதுவரை எந்த கோயிலுக்கும் போய் தரிசனம் செய்ததில்லை. ஜெயலலிதா போல் நீராடி பூஜை செய்ததில்லை. அவரின் மஞ்சள் துண்டை உங்களை போன்ற சுண்டைகாய் பசங்களுக்காக எடுத்து விட்டால் உங்களின் அர்த்தமில்லாத பொய் உண்மையாகி விடும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் கலைஞர் பகுத்தறிவு பேசுபவர் என்ற ஒரே காரணத்துக்காக நிறைய ஆத்திகர்களை,தெய்வ பக்தி உள்ளவர்களை பகைத்து கொண்டார் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் துணை முதல்வரும் அப்படி இருக்க வேண்டும் என்றல்ல. கலைஞர் தன் கொள்கையில் பிடிவாதமாக இருப்பவர். துணை முதல்வர் எல்லாரையும் அரவணைத்து செல்பவர். அதனால் அவர் பகுத்தறிவு பாதையிலிருந்து சற்று வித்தியாசப்பட்டவர். எல்லா திமுக காரர்களும் கடவுள் பக்தி இல்லாதவர்கள் என்று நினைப்பது மிக தவறு. அது உண்மையல்ல. நான் Hardcore திமுக காரன். ஆனால் கடவுள் பக்தியுள்ளவன். அதுபோல் துணை முதல்வரும். இது ஒரு நல்ல தொடக்கம். இந்த உலகத்துக்கு திமுககாரர்கள் என்றால் கடவுள் பக்தியில்லாதவர்கள் அல்ல என்று புரியவைப்பதற்கு. பொதுவான சிந்தனை உள்ளவர்களே!நீங்கள் தயவுசெய்து, எல்லாரையும் அரவணைத்து போகும் துணை முதல்வரை பாருங்கள். இந்த விதண்டாவாத ஜெயலலிதாவை விட்டு தள்ளுங்கள்....
வளையாபதி - chennai,இந்தியா
2010-11-25 06:46:52 IST
இது தினமலரில் வந்த செய்தி. செய்தி இதுதான் கடந்த 11ம் தேதி தனது தோழி சசிகலாவுடன் கொடநாடுக்கு வருகை தந்து, எஸ்டேட் பங்களாவில் தங்கியுள்ளார். எஸ்டேட்டில் உள்ள தேயிலை தொழிற்சாலை புதுபிக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்த நிலையில், தொழிற்சாலை திறந்து பூஜையில் பங்கேற்றார். தொடர்ந்து, காலை 11.00 மணியளவில், எஸ்டேட்டினுள் உள்ள அம்மன் கோயிலில் நடந்த கிடா வெட்டு நிகழ்ச்சியிலும், சிறப்புப் பூஜையிலும் பங்கேற்றுவிட்டு பங்களாவுக்கு சென்றார். இந்த அம்மா தான் தன் ஆட்சி காலத்தில் கோவில்களில் எந்தஉயிர்களையும் கொல்ல கூடாது என்ற சட்டத்தை கொண்டுவந்தார். இன்று இவரே கிடா வெட்டி பூஜை செய்கிறார். இவர் போட்ட சட்டத்தை இவரே மதிப்பதில்லை. ஊருக்கு ஒரு சட்டம், இவருக்கு ஒருசட்டம். இதுதான் ஜெயலலிதா. இவர் பகுத்தறிவை பற்றி பேசுகிறார்....
kk - surat,இந்தியா
2010-11-25 06:26:24 IST
ஹிந்து மதத்தினரே ஹிந்து மதத்தினரே எழுந்திருங்கள் ,,, தூங்கியது போதும் இனி எழுந்திருங்கள் 110 கோடியில் 90 கோடி நாமடா ஆனால் நம் மத விழாவை நிம்மதியாக கொண்டாட முடியவில்லையடா அண்டி வந்த மதங்கள் நம்மை ஆள நினைக்குதடா இதை பார்த்து ஹிந்து மதத்தை சேர்ந்த என் மனம் துடிக்குதடா என் போல நீயும் இல்லையடா நம் மதத்தை காப்பாற்ற என்னோடு கை சேருடா மதம் மாறியவன் எல்லாம் இன்று நம்மை பார்த்து சிரிக்கிறான் நம் மதத்தை நாமே மதியாமல் இருப்பதால் தானடா அண்டி வந்தவன் நம்மை ஆள நினைக்கிறான் இருக்க இடம் கொடுத்தோம் படுக்க பாய் கேட்கிறான் இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா ஹிந்து மதத்தை சேர்ந்தவன் ஆடு வெட்டினால் வழக்கு போடுகிறான் மற்ற மதத்தை சேர்ந்தவன் ஆடு, ஒட்டகம் வெட்டினால் இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா மூட பழக்க வழக்கம் இல்லா மதங்கள் பாரில் எங்கும் இல்லையாட நம் மதத்தை பற்றி குறை கூறுவது இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா இந்து மதத்தை சேர்ந்தவன் உயிர் துறந்தால் சிலரை புதைப்பது ஹிந்து மத மரபடா மின்சார சுடுகாட்டில் அவனை தகனம் செய்வது கொடுமையடா மற்ற மதத்தை சேர்ந்தவன் உயிர் துறந்தால் தனியே புதைக்க இடம் கொடுக்கிறான் நம் மதத்தை சேர்ந்தவனுக்கு நகரில் தனியே இடம் இல்லையடா இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா இறைவா நன் மட்டும் புலம்பி என்ன பயன்? நீ படைத்த இந்த மதத்தை நீ காப்பாற்றி கொள் உன்னால் முடியாமல் போனால் மற்றவர் நம் மதத்தை அழிக்கும் முன் நீயே நீ படைத்த இந்த இந்து மதத்தை என்னோடு சேர்த்து நீயே அழித்துவிடு ஹிந்து மதத்தின் அடையாள சின்னங்கள் அயோத்தியில் ஆதாரபூர்வமாக ஹிந்து மதத்தினர் உடையது என்று நிரூபிக்க பட்டும் மூன்றாக பிரிப்பது எந்த வகையில் நியாயம் இது எந்த வகையில் நியாயமடா யார் வகுத்தது இந்த நியதியடா please save our religion அவனுடன் சேர்ந்து உண்டு மகிழ்ச்சி அடைகிறான் ,...
லொடுக்கு பாண்டி - கோவை,இந்தியா
2010-11-25 05:36:39 IST
சுயநலமே பிரதானமானது; அந்த சுயநலத்துக்காக திராவிட இயக்கம், அண்ணா, பெரியாரை விற்று வயறு வளர்த்தவர் இந்த முத்தமிழ் கூத்தகர். இன்றைய முதல்வர் ஒரு மிகப்பெரிய சுயநல மான்ஸ்டர். அவருக்கு தற்போதய குறிக்கோள் சுருட்டுவது 100 % ; ஓட்டை ஒழுகல் ௦ ௦ஜீரோ % . எல்லாம் குடும்ப கஜானாவில் நிரம்ப வேண்டும்....
ram - chennai,இந்தியா
2010-11-25 05:34:54 IST
பாட்டியும் தாத்தாவும் சண்டை போட்டுக்கிறாங்க...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-11-25 04:26:13 IST
சபாஷ் சரியான சாட்டையடி கேள்வி. அம்மா ஒன்றை மறந்துவிட்டீர்கள், இந்த பகுத்தறிவு பகலவன் மகன் ஸ்டாலின் புட்டபர்த்தி சாய்பாபாவை சந்தித்து ஆசி பெற்றுள்ளார், இதை நீங்கள் கேட்டால், இதற்க்கு பேர் தான் பகுத்தறிவு என்று கருணாநிதி கூறுவார். அவர் கழுத்தில் மஞ்சள் துண்டு போட்டுள்ளார், யாரோ ஜோசியகாரன் சொன்னானாம், எப்போதும் தோளில் மஞ்சள் துண்டு இருக்க வேண்டும் என்று, அது தான் பகுத்தறிவு என்று கூறுவார் கருணாநிதி. ஆனால் வரும் தேர்தல் முடிவுக்கு பிறகு அந்த துண்டு அவரின் தலைக்கு தானாகவே சென்றுவிடும். ஊருக்கு தான் உபதேசம், வீட்டுக்கும் தனக்கும் இல்லை. தான் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவன் என்று கூறிகொள்வார். ஆனால் அட்சதை, அய்யர், மந்திரம் எல்லாம் இருக்கும். சும்மா ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி மக்கள் பரபரப்பாக பேசுகிறார்கள் அல்லவா,அதனை திசை திருப்ப நேற்று சம்பந்தம் இல்லாத அறிக்கை வெளியிட்டார். மக்களை ஏமாற்றுவதிலும், கட்டு கட்டா கொள்ளையடிபதிலும், மக்களை திசை திருப்புவதில் மஞ்சள் துண்டுக்கு நிகர் மஞ்சள் துண்டு தான்....
என் பெயர் - திருக்குவளை.,இந்தியா
2010-11-25 03:43:46 IST
ஜெயலலிதா அவர்கள் ஒரு நல்ல அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அய்யா மஞ்சத்துண்டு, இதுக்கு என்ன சொல்றீங்க.... நீங்க அந்த ஆடியோவை கேட்டீங்களா ?.. உங்க கட்சில (குடும்பம்) எவ்வளவு குடும்பி பிடி சண்டை இருக்குனு தெரியுது....உங்களுக்குத்தான் இங்கிலீஷ் தெரியாதே......
லிங்கசாமி - அட்லாண்டா,யூ.எஸ்.ஏ
2010-11-25 03:23:28 IST
நீங்க சொல்லுறது எல்லாம் கரெக்ட் தான் ஆனா பாருங்க நாளைக்கு அவரு வேற மாதிரி அறிக்கை விடுவாரு. ஒரு கேள்விக்கும் பதில் இருக்காது. ஜெயலலிதா அப்படி பேசினார், இப்படி பேசினார், 62 கோடி சொத்து சேர்த்தார் நு அறிக்கை விடுவார். Anyway he is going to announce some freebies and try to win next time also... Only you can save tamil Nadu.. Join with Vijakandh and do something......
கலைஞர் பிரியன் - டென்வர்,யூ.எஸ்.ஏ
2010-11-25 01:28:07 IST
இதுக்கு பேருதான் சூரியனை பார்த்து 'நாய்' குலைக்கரதிங்கறது....
சேகவி - mahe,செசேல்ஸ்
2010-11-25 01:25:18 IST
அப்பு! கருணாநிதி! காமெடி பீஸ் ஆகி ரொம்ப நாளாச்சு!...
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-11-25 01:00:14 IST
அவரு என்னென்ன தில்லு முள்ளு பண்ணுதுன்னு ஒபாமா வரைக்கும் தெரியும். அதையெல்லாம் விட்டு தள்ளு. நீ வந்து எதாச்சும் செய்ய போறியா, முடியுமா உன்னால, நாடு ரொம்பா பின்னாடி போய்டிச்சு, இன்னும் பழங்கதைய பேசிக்கிட்டு...... ஒன்னு எதாச்சும் பிளான் இருந்தா பேசு, ஒன்னும் இல்லேனா கொஞ்சம் ஓரமா போய் நில்லு. நாங்க வேற எதாச்சும் ஆளு இருந்தா பாத்துகிறோம். டேய், உடனே நீ பெரிய யோக்கியமா ன்னு பச்சை மேல பாயாதீங்கடா. யாரா இருந்தாலும் சரி, என்ன சேதி, இது வரைக்கும் எப்படியோ, இனிமேல என்ன பண்ண போறோம், எப்படி முன்னேற போறோம், அத சொல்லுன்னு கேட்டு பழகுங்கடா டவரா செட்டுங்களா. எல்லார்கிட்டயும் கேளுங்கடா. கேட்க கேட்க தான் அவங்க மாறுவாங்க. இன்னும் பழங்கதைய பேசி மண்டை காயவேச்சீங்க, பின்னாடி டூப்பை சொருகி தார் ஊத்தி விட்டுடுவேன். அப்புறம் மொத்தமா எல்லாம் அடைச்சிக்கும். வா... வா... கேளு... கேளு... மஞ்சள் கிட்ட கேளு, பச்சை கிட்ட கேளு, வெள்ளை கிட்ட கேளு, கருப்பு கிட்ட கேளு. எல்லார்கிட்டயும் கேளு. அவனுக முழி பிதுங்கி பின் வாங்குவத பாத்து ரசி, சிரி, அப்படியே அவனுகள ஓரம் கட்டு. டேக் ஓவர் பண்ணு. மேட்டர முடி. ஓடு.. ஓடு... குஜராத் பீகார் க்கு மேல இன்னும் மேல முன்னேறி ஓடு. ஆஹா எல்லோரும் ஓடி வராங்க. சூப்பர் டா கைப்புள்ள. அவுங்.... எங்க எல்லோரும் தாண்டி ஓடுறாங்க. அட கருமமே... இலவசமா செருப்பு கொடுக்கிறாங்க... அத வாங்கவாடா ஓடி வந்தீங்க. உங்கள எல்லாம் ஆண்டவன் வந்தாலும் காப்பாத்த முடியாதுடா. கைப்புள்ள திரும்பி போகிறான். தொண்டை வறண்டு விட்டது....
சுரேஷ் - சென்னை,இந்தியா
2010-11-25 00:29:59 IST
அடி ஆத்தி! இந்த பொம்பள என்ன எடுத்தோம் கவுத்தோம்னு பேசுது? இதோட சாமீ பக்திதான் சிரிப்பாய் சிரிக்குதே? தொட்டதுக்கெல்லாம் தோஷம் பார்க்கும் இந்த தன்மான தலைவி ஒரு அறிக்கை விடுறதுககுக் கூட நேரம்,காலம் பார்க்குமே? கொடுமைடா !...
Gaurav - Bangalore,இந்தியா
2010-11-25 00:24:28 IST
அம்மா சொல்வது சரிதான்.. ஹிந்து என்றால் திருடன் என்று கூறி அவர்கள் மனதை புண்படுத்திவிட்டு, கோவில்களுக்கு செல்வது எந்த வகையில் நியாயம் ?...
அருண் - சென்னை,இந்தியா
2010-11-25 00:11:03 IST
ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியாது !!! ஹஹா !! அதிர் வேட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக