வியாழன், 25 நவம்பர், 2010

Congress: ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விரும்பும் கூட்டணி வெற்றிபெற வேண்டுமானால் இதுபோன்ற நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி எடுக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை நடந்தது. இந்த பாதயாத்திரை குழு நேற்று சென்னை வந்தடைந்தது.

இந்த விழாவில் பேசிய யுவராஜா, ஊழலுக்கு எதிரான கட்சி காங்கிரஸ். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன்.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டவரை திமுகவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விரும்பும் கூட்டணி வெற்றிபெற வேண்டுமானால் இதுபோன்ற நடவடிக்கைகளை அவர் எடுக்க வேண்டும்.

கோஷ்டிப் பூசல்கள் நிறைந்த காங்கிரஸ் கட்சியால் பாதயாத்திரை நடத்த முடியமா என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். காங்கிரஸ் கட்சியைத் தவிர வேறு யாராலும் பாதயாத்திரை நடத்த முடியாது. திராவிடக் கட்சிகளில் தலைவர்கள் வந்தால் மட்டும் கூட்டம் கூடும், பாதயாத்திரை நடத்த முடியும்.

ஆனால் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே என்னைப் போன்ற சாதாரணத் தொண்டர்கள் கூட பாதயாத்திரை நடத்த முடியும் என்றார் யுவராஜா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக