புதன், 3 நவம்பர், 2010

தப்பு பண்ணிட்டேன் - வருந்தும் அமீர்



       ‘பருத்திவீரன்’  அமேஸிங் வெற்றியை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின் ‘ஆதிபகவன்’  படத்தை உருவாக்குவதில் பிஸியாக இருக்கும் அமீர், ‘நட்புக்கா இந்தத் தவறை செய்து விட்டேன். இனியும் இது மாதிரி செய்யவே மாட்டேன்’ என வருத்தப்படுகிறார். அப்படி என்ன செய்யக்கூடாத தப்பு...?



இன்றைய தமிழ் சினிமாவில் தரமான படங்கள் உருவாகுவதும் கஷ்டம், அப்படியே உருவானாலும் அந்தப் படம் வெளியாவது கஷ்டம் என நல்லப் படங்களின் மீது உள்ள தனது இஷ்டத்தை அண்மையில் தெரிவித்திருந்தார் மிஷ்கின்.  

தனது சித்திரம் பேசுதடி, அஞ்சாதே போன்ற படங்களே மிகவும் மட்டமானவை என வருத்தப்பட்டார். அதற்கு காரணம் அவற்றில் வரும் குத்துப்பாடல்களும், கமர்ஷியல் மசாலாத்தனமும்தான் எனக்கூறும் மிஷ்கின், சேரன் -  பிரசன்னா நடிப்பின் இப்போது இயக்கி முடித்துள்ள ‘யுத்தம் செய்’ படத்திலும் ஒரு செம குத்துப்பாட்டு வைத்துள்ளார்.
வாளமீனுக்கும்...  கத்தாழ கண்ணால... போன்ற வித்தியாசமான காட்சியமைப்பிலான குத்துப்பாடல்களைப் போலவே இந்தப் பாடலும் அமைந்திருக்கிறதாம். இந்தப் பாடலில் நீத்து சந்திராவுக்கு இணையாக செம குத்தாட்டம் போட்டிருக்கிறாராம் அமீர்.

இப்படி...  ஆடியிருப்பதை பற்றி அமீர், “மிஷ்கினும் சேரனும் வேண்டி விரும்பி கேட்டதால தட்டமுடியாமல் அந்தப் பாடலில் நடிக்கவேண்டியதானது. ஆனால் இதில் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இந்தத் தவறை இனியும் நான் செய்யமாட்டேன்,”  என கூறியுள்ளார்.  

“இதுபோன்ற பாடலில் நடிப்பதால்... அதே மாதிரியான ஒரு தாக்கத்தை என்மீது ஏற்படுத்தி விடுமோ என நினைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அந்தப் பாடல் வெளிவரும் போது அதை நான் பார்க்க மாட்டேன்” எனவும் வேண்டா வெறுப்பாக கூறுகிறார் அமீர்.   

‘யுத்தம் செய்’ படத்தில் இடம்பெற்ற எல்லாப் பாடல்களையும் வெட்டி எறிந்து விட்ட மிஷ்கின், அமீர் ஆடிய இந்தப் பாடலை மட்டும்தான் விட்டு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக