வியாழன், 4 நவம்பர், 2010

மன்னாரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருந்த 20 பேர் கைது

மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குஞ்சுக்குளம், மாத்தகிராமம் ஆகிய கிராமங்களில் பதுக்கிவைத்து வேட்டைக்கு பயன் படுத்தி வந்த சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தயாரித்த இடியன் என அழைக்கப்படும் வேட்டைத் துப்பாக்கிகள் 21 ஐ மன்னார் பொலிஸார் பறிமுதல் செய்ததோடு அதனை தன்வசம் வைத்திருந்த 20 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வன்னிக்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்னா நானயக்காரவின் வேண்டுகோளுக்கமைவாக மன்னார் மாவட்ட பொறுப்பதிகாரி சி.கொடிதுவக்குவின் ஆலோசனைக்கமைவாக மன்னார் பொலிஸார் மேற்படி கிராமங்களில் தேடுதல்களை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று பொலிஸ் நிலைய அதிகாரிகள் மடுப்பொலிஸ் நிலையத்திற்கு சென்று அதனைப் பார்வையிட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக