வியாழன், 4 நவம்பர், 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இரா.சம்பந்தனுடனசந்திப்பு : எம்.கே சிவாஜிலிங்கம்!

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்தை நடத்தியதாக முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் நடைபெற்றது. இது தொடர்பாக தொடர்பு கொண்ட கேட்ட போதே எம்.கே சிவாஜிலிங்கம் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் சிவாஜிலிங்கம், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈழ மக்கள் விடுதலை முன்னணி பத்மநாபா பிரிவின் தலைவர் சிறிதரன் ஆகியோரே இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை இன்று கொழும்பில் மாலை 5 மணியளவில் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் சந்தித்து பேசிய போது வட, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்று கொடுக்க ஒருமித்தவாறு பதில் அளித்தாக தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த ஜுலை மாதம் 28ஆம் திகதி சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தோம். ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்தமையால் எமக்குப் பதில் எதுவும் வழங்கப்படவில்லை. தற்பொழுது அவர் நாடு திரும்பியுள்ளார். அவருக்கு அனுப்பின கடிதத்தின் பிரதியை வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பில் கூட்டமைப்பின் ஏனைய அங்கத்தவர்களுடன் கலந்துரையாடி தமது தீர்மானத்தை தெரிவிப்பதாக சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
மேலும் இன்றைய அரங்கத்தின் கூட்டத் தொடரில், வடகிழக்கு மக்களின் மீள்குயேற்றம், காணிப் பிரச்சினை, போர் கைதிகளின் விடுதலை என பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையின் மக்களின் பிரச்சினை தொடர்பில் மகஜர் ஒன்றில் கையெழுத்து இட்டு 19, 20 ஆம் திகதிகளில் ஜனாதினதியை சந்தித்து மகஜரை கையளித்து அவருடன் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா செய்து தருவார் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், நாம் ஏற்கனவே கூறியதைப் போன்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இரண்டாம் கட்டமாக மலையகக் கட்சிகளை இணைப்பது பற்றியும் நாம் ஆராய்ந்ததாக அவர் தெரிவித்தார். இன்றைய அரங்க கூட்டத்தொடரில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி, ஆனந்தசங்கரி தலையிலான

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக