வியாழன், 18 நவம்பர், 2010

அசினுடன் விஜய் நெருக்கம்! இலங்கை சம்மந்தமாக எதுவும் அசினிடம் கேட்க கூடாது


           லங்கை சென்று வந்ததால் தமிழர்களால் சபிக்கப்பட்டவர் அசின். இப்போது விஜய்யின் காவலன் படத்தில் தமிழர்களின் எதிர்ப்போடு நடித்துவருகிறார். இந்தப் படத்தின் படபிடிப்பு சென்னையில் நடைபெற்றபோது அசினுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பை கேட்டு வாங்கியது காவலன் படக்குழு. படபிடிப்பு தளத்தின் முன்பு பல தமிழ் இயக்கங்கள் போராட்டம் நடத்தியது தான் காரணம். என்ன வேடிக்கை!



இந்த படத்தை இயக்குபவர் இயக்குனர் சித்திக். அவர் இது பற்றி பேசியதாவது, படத்தை நல்லபடியாக முடிக்க வேண்டும் என்பது என் வேலை. மற்றதைப் பற்றி எனக்கு தெரியாது என்று சொன்னார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தபோது, இலங்கை சம்மந்தமாக எதுவும் அசினிடம் கேட்க கூடாது என்று கட்டளையிட்டார்கள். மீறி இலங்கைப் பேச்சை எடுத்தும் அசின் விறு விறுவென வெளியேறினார். இப்படியெல்லாம் இருக்கிற நிலையில்... 

காவலன் படத்தின் பாடல் காட்சி பூனேவின் அருகில் உள்ள லவாசா மலையில் எடுக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் விஜய்யுடன் அசின் பயங்கர நெருக்கம் காட்டி இருக்கிறாராம். விஜய்யுடன் அசினுக்கு இது மூன்றாவது படம் என்பதால் புரிதல் அதிகமாய் இருக்கலாம் என்று பேசிக் கொள்கிறது சினிமா வட்டாரம். 

இருந்தாலும் பாடல் காட்சி ரொம்ப சூப்பரா வந்திருக்கு என்று சொல்கிறது படக்குழு. இந்தி பக்கம் போனதிலிருந்து அசின் கவர்ச்சியில் கொஞ்சம் தாராளம் காட்டி வருகிறார் என்றும் இப்பொது சல்மான் கானுடன் நடிக்கும் ரெடி படத்திலும் சல்மானுடன் அசின் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார் என்பதும் காத்து வழியாக கிடைத்த செய்தி. உண்மை என்னனு யாருக்கு தெரியும்!? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக