ஞாயிறு, 14 நவம்பர், 2010

அரசியல் உள்பட எந்த விஷயத்திலும் அந்த லேடியை நம்பமுடியாது

ராசாவை பதவியிலிருந்து விலகச்சொல்லி கலைஞரிடம் காங்கிரஸ் பிரஷர் கொடுப்பதா கூட செய்திகள் வெளியாகுதே...''

""காங்கிரஸ் தரப்பிலிருந்து கலைஞர்கிட்டே இதுபற்றி யாரும் பேசலை. ஆடிட்டர் ரிப்போர்ட் அடிப்படையில் சர்ச்சை வந்ததுமே கலைஞர், இந்த ரிப்போர்ட்டையெல்லாம் வைத்து ராஜினாமா செய்திட முடியுமா? மக்களுக்கு பலன் கிடைப்பதற்காக நடை முறைப்படுத்தப்படும் திட்டங் களை லாப-நட்ட நோக்கத்தில் பார்க்கக்கூடாது. நாம் 1 ரூபாய் அரிசி, கலர் டி.வி., கேஸ் அடுப்பு, மருத்துவக் காப்பீடு, கான்க்ரீட் வீடு எல்லாத்தையும் மக்களுக்காகச் செய்றோம். அதெல்லாம் அரசுக்கு நட்டம்னு சொன்னா ஏற்கமுடியுமான்னு கட்சி சீனியர்களிடம் சொல்லியிருக்கிறார். அதனால், ஆ.ராசா ராஜினாமா செய்ய வேண்டியதில்லைங்கிறதுதான் தி.மு.கவின் நிலைப்பாடு.''

""இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஜெ திடீர்னு குண்டு வீசியிருக்காரே.. ராசாவை பதவி நீக்கம் செய்வதால், தி.மு.கவின் ஆதரவை காங்கிரஸ் இழக்கவேண்டியிருந்தால் நான் 18 எம்.பி.க்களின் ஆதரவைத் தருவேன்னு பேட்டி கொடுத்திருக்காரே.. ஏற்கனவே நம்ம நக்கீரனில் இதைச் சொல்லி யிருந்தாங்க. அ.தி.மு.க.வின் 9 எம்.பி.க்களோடு தேவகவுடா கட்சியின் 3 பேர், அஜீத்சிங் கட்சியின் 6 பேர் என்று 18 எம்.பி.க்கள் கணக்குடன் ஜெ மூவ் பண்ணு றாருன்னு நக்கீரன்தான் முதலில் சொன்னது. இப்ப ஜெ வெளிப்படையா அழைப்பு விடுத்திருப்பதற்கு காங்கிரசின் ரியாக்ஷன் என்னவாம்?''

""ஜெ. பேட்டி டி.வியில் ஒளி பரப்பான விவரத்தை சோனியாவிடம் சொன்ன மறுவிநாடி, அரசியல் உள்பட எந்த விஷயத்திலும் அந்த லேடியை நம்பமுடியாதுங்கிறதுதான் அவர் கிட்டேயிருந்து வந்த ரியாக்ஷன். ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை வைத்து உள்ளே வர பார்க்கிறார். ஜெ.வை நம்பி, நாம் கூட்டணி ஆட்சி யை நடத்தினால் பிரணாப் முகர்ஜியும் ப.சிதம்பரமும் தினமும் போயஸ்கார்டனில் போய் நிற்கவேண்டியிருக்கும்னு கமெண்ட் அடித் திருக்கிறார் சோனியா. தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத், ஸ்பெக்ட்ரம் விவகாரத்திற்கும் கூட்டணிக்கும் சம்பந்தமில்லை. தமிழகத்தில் இப்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கோம். இதில் ஜெ.வுக்கு ஒதுக்க சீட் இல்லைன்னு நக்கலா சொல்லியிருக்கிறார்.''

""காங்கிரசுக்கு ஜெ வெளிப்படையா அழைப்பு விடுத்திருப்பதால் இப்ப அவரோட இருக்கிற கம்யூனிஸ்ட் கட்சியினரும் வைகோவும் என்ன சொல்றாங்க?''

""காங்கிரஸ்-பா.ஜ.க அல்லாத கூட்டணின்னு அ.தி.மு.க பக்கம் சாய்ந்திருக்கும் இரு கம்யூனிஸ்ட்டு களுக்கும் ஜெ. நம்மை கடைசிவரை கூட்டணியில் வச்சப்பாரா, ஒழுங்கா சீட் ஒதுக்குவாராங்கிற சந்தேகம் இருந்துக்கிட்டேதான் இருக்கு. தமிழக அரசியலில் எங்க நிலைமைதாங்க ரொம்ப மோசம்னு தோழர்கள் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. ஜெ.வோட பேட்டிக்குப் பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், இது தி.மு.க அணிக்குள் குழப்பம் ஏற்படுத்த நடத்தப்படும் ட்ராமான்னா சரின்னு ஒத்துக்கலாம். நிஜமான கூட்டணிக்கான காய் நகர்த்தலா இருந்தா ரொம்ப சீரியஸான விஷயம். காங்கிரசுடன் கூட்டணிங்கிறது ஸ்பெக்ட்ரத்தைவிட மோசமானது. எங்க மத்திய கமிட்டிதான் இறுதி முடிவு எடுக்கும்னு சொல்றாங்க.''

""மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?''

""இப்ப நடந்துக்கிட்டிருக்கிற எங்க மத்திய கமிட்டிக் கூட்டத்தில், காங்கிரசுக்கு எதிரா மற்ற கட்சிகளை அணிதிரட்டுவது சம்பந்தமா ஒரு விவாதம் நடக்குது. அப்படி இருக்குறப்ப, காங்கிரசோடு ஜெ. நேரடியா பேசுறதை எப்படி ஒத்துக்க முடியும்? தி.மு.க. பக்கம் எங்களை ஜெ. தள்ளிவிடுறார். இது தெரிஞ்சுதான் கலைஞர் எங்ககிட்டே நல்லபடியா பழகிக்கிட்டி ருக்கிறார்னு சி.பி.எம். தோழர்கள் சொல்றாங்க. ஜெ. அறிக்கையால் ஷாக் ஆகியிருக்கும் ம.தி.மு.க.வினர் தங்கள் தலைவரோட ரியாக் ஷனை எதிர்பார்த்துக் கிட்டிருக்காங்க.''

NAKKEERAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக