ஞாயிறு, 14 நவம்பர், 2010

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர்களுக்கு தனி Counter.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வெளிநாட்டு கடவுச் சீட்டினை உடையோருக்கு தனியான Counter ஒன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை திறக்கப்படவுள்ளதாக பிரதி பொருளாதாக அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயரத்ன தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தினூடாக தொழில்வாய்ப்பு மற்றும் வியாபார நோக்கங்களுக்காக பிரயாணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் இவர்களால் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகளுக்கு ஏற்படக்கூடிய தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இவ்வொழுங்கு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக