இதுவரையில் 12,000பேர் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னமும் 10 முகாம்களில் 4952 வரையிலானோரே புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர்களை சமூக மக்கள் வேறுபடுத்தி பார்க்காது அவர்களை சாதாரணமாக பார்க்க வேண்டும் என்பது தொடர்பில் மதகுருக்கள், ஆசிரியர்கள் மற்றும் சங்கத் தலைவர்களுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தலைமையில் இன்று காலை கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக