புதன், 10 நவம்பர், 2010

வ குவாட்டர் கட்டிங் படம் எப்படி?

How is Vaa quater cutting movie?
ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் ஓட்டி எடுத்த தமிழ்ப்படத்தை தயாரித்த தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் உருவாகி தீபாவளியன்று திரைக்கு வந்திருக்கும் புதிய படம் வ குவாட்டர் கட்டிங். நடிகர் சிவா நாயகனாகவும், நடிகை லேகா வாஷிங்டன் நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படம் முதலில் குட்டார் கட்டிங்காக வளர்ந்து பின்னர் வ ஒட்டிக் கொண்டது. வ என்பதற்கு சரியான அர்த்தம் இல்லையென்றாலும் அது தமிழ்ப்பெயர் என தமிழக அரசு ஏற்றுக் கொண்டது.

தமிழ்ப்படம் போலவே இந்த படமும் இருக்கும் என தியேட்டருக்கு சென்ற பலரும் பலவிதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் நச்சென நாலே வார்த்தையில் படத்தின் நாயகி லேகா ஒரு கருத்து சொல்லியிருக்கிறார். அந்த கருத்துதான் வ படக்குழுவையே எரிச்சலடைய வைத்திருக்கிறதாம். அப்படியென்ன சொன்னார் அம்மணி. படத்தை பார்த்தால் மெண்டலாவது நிச்சயம் - இதுதான் லேகாவின் நாலு வார்த்தை கமெண்ட். அவர் ஏன் அப்படி சொல்கிறார்? என்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. தமிழ் சினிமாவில் தனக்கு இன்னும் பிரேக் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கும் லேகா, இந்த படம் அந்த வருத்தத்தை போக்கும் என்றே நம்பியிருந்தார். ஆனால் இடைவேளை வரைக்கும் இவர் முகத்தையே காட்டவில்லை படத்தில். அதன்பின்பும் இவரது பங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை ரசிகர்களுக்கு. இந்த வருத்தமெல்லாம் ஒன்று சேர்ந்ததால்தான் இப்படி கமெண்ட் அடித்தாரோ என்னவோ? என்று பேசிக்கொள்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக