வெள்ளி, 19 நவம்பர், 2010

ஜனாதிபதி பதவியேற்பை முன்னிட்டு புலிகள் 100பேர் விடுதலை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வை முன்னிட்டு புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் 100 பேர் தடுப்பு முகாமில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை மற்றும் புனர்வார்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ் குமார் தெரிவித்தார்.

இம்மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று வவுனியா கலாசார மண்டபத்தில் வைத்து மாலை 3 மணியளவில் இவர்கள் தமது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் பொலநறுவை – சேனபுர தடுப்பு முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களே விடுவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு பிரதி அமைச்சர் விஜிதமுனி சொய்சா கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக