வெள்ளி, 19 நவம்பர், 2010
ஒபாமாவை 2012-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோற்கடிப்பேன்: சாரா பாலின்
நியூயார்க்: வரும் 2012-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் சாரா பாலின் போட்டியிடுவார் என்று ஊகிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிட்டால் அவரைத் தோற்கடிப்பேன் என்று அவர் சவால் விட்டுள்ளார். பாலின் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் குடியரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தது.இந்தநிலையில், 2012ல் நடைபெறும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும், அது பற்றி தனது குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர் அலாஸ்கா மாகாண ஆளுநராக இருந்தவர். பின்னர் ராஜினாமா செய்து விட்டார். அவரிடம் 2012-ம் ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் உங்களால் அதிபர் ஒபாமாவை தோற்கடிக்க முடியுமா என்று கேட்டதற்கு, தன்னால் முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக