வெள்ளி, 19 நவம்பர், 2010

பகிடிவதையில் ஈடுபட்ட 14 மாணவர்கள் ஒரு வருடத்துக்கு கல்வி நடவடிக்கையில் பங்குபற்ற தடை?

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை மற்றும் மோதல்கள் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 சிங்கள மாணவர்கள் உட்பட 14பேருக்கு ஒரு வருடத்துக்கு பல்கலைக்கழக பாட நடவடிக்கையில் இணைந்துகொள்ள இன்று தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி பிரேம்குமார் தெரிவித்தார். நேற்று முன்தினம் வர்த்த பீட சிங்கள மாணவி ஒருவரை பகிடி வதைக்கு உட்படுத்தியமை தொடர்பில் 5 சிங்கள மாணவர்களுக்கும், அதற்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர்கள் இருவருக்குமாக 7 சிங்கள மாணவர்களுக்கும் ஒரு வருட வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா நுண்கலைக்கல்லூரியில் கடந்த மாதம் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் 7 தமிழ் மாணவர்களுக்கும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக