ஞாயிறு, 17 அக்டோபர், 2010

UNP and Ranil.வேலை அதிகம்,உலகில் எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு ரணிலுக்கு

ஆள் பார்த்தே ஒழுங்காற்று நடவடிக்கை
உலகில் எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இப்போது வேலை அதிகம். ஐக்கிய தேசியக் கட்சிக்கு என்று சொல்வதிலும் பார்க்க ரணிலுக்கு என்று சொல்லலாம்.

பொன்சேகவின் விடுதலைக்காக நாடு பூராவிலும் ‘போராட்டம்’ நடத்த வேண்டும். ரணிலின் போராட்டம் ‘தேவையற்றது’ என்று அனோமா சொன்ன பின்னும் அவர் விடுவதாக இல்லை. எங்களைக் கேட்காமல் மன்னிப்புக் கடிதம் அனுப்பிவிட்டார் என்று அனோமா சொன்னதன் அர்த்தம் அது தானே.

பொன்சேகா மீது ரணிலுக்குக் கொஞ்சமும் பற்று இல்லை என்கிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு முக்கியஸ்தர். கட்சிக்குள் தனக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் எதிர்பைத் திசைதிருப்புவதற்காகவே விடுதலை பற்றிப் பேசுகின்றாராம்.

ஒழுங்காற்று நடவடிக்கை ரணிலுக்கு வேலைப் பளு கொடுக்கும் அடுத்த விடயம். எத்தனை பேருக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுப்பது? கட்சி மாறியவர்களுக்கு எதிராகவும் எடுக்க வேண்டும். கட்சிக்குள் கிளர்ச்சி செய்பவர்களுக்கு எதிராகவும் எடுக்க வேண்டும்.

கட்சி மாறியவர்கள் விடயத்தில் ரணில் கடுமையாக இருக்க மாட்டார். அவர்களால் அவரது தலைமைப் பதவிக்கு ஆபத்து இல்லை. கட்சிக்குள் கிளர்ச்சி செய்பவர்கள் தான் பொல்லாத பேர்வழிகள். அவர்களால் தானே தலைமைப் பதவிக்கு ஆபத்து.

கிளர்ச்சி செய்பவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்து அவர்களை ஒரு ‘வழி பண்ணுவதற்காக’ என்ன செய்தாலும் தகும் என்கிறார் ரணிலின் பிரபலமான ஆதரவாளர் ஒருவர். இந்த ‘தகும்’ என்பதில் ஒரு அர்த்தம் உண்டு.

பதினெட்டாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தவர்களைக் கட்சியிலிருந்து நீக்குவதாகச் செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது என்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஜயலத் ஜயவர்த்தன கூறினார். அப்படி எதுவும் பேசப்படவில்லை என்று தொலை பேசி மூலம் மறுதலித்தார் தயாசிறி ஜயசேகர. இவர் ஒரு கிளர்ச்சியாளர். சும்மா விடலாமா? இவருக்கு எதிராக இப்போது ஒழுங்காற்று நடவடிக்கை. செயற்குழுவில் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்று நிரூபிப்பதற்காக கூட்ட அறிக்கையைத்திருத் தியிருக்கின்றார்கள் என்று ஒரு கதை. ‘என்ன செய் தாலும் தகும்’ என்பதன் அர்த்தம் இது தான்.

ரஞ்சன் ராமநாயக ஒரு அப்பாவி ஆசிரியையை ஏமாற்றிப் பத்து லட்சம் ரூபா ‘அபேஸ்’ பண்ணியிருக்கிறார். ஆசை காட்டி மோசம் செய்த ‘கேஸ்.’ கட்சி மட்டத்தில் ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டிய விடயம். நடக்குமா? அவர் ரணிலின் ஆதரவாளராச்சே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக