ஞாயிறு, 17 அக்டோபர், 2010

மட்டக்களப்பில் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களின் தகவல்கள் திரட்டப்படுகின்றனவாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் இயக்கத்திலிருந்து விலகிச் சென்றவர்கள், படையினரிடம் சரணடைந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்கள், மாவீரர்களின் உறவினர்கள்  தொடர்பான தகவல்களைப்  பொலிஸாரும்  பாதுகாப்புப் படையினரும் திரட்டி  வருவதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளது      என மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர்   தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராமசேவகர்கள் ஊடாகவே இந்த விபரங்கள் திரட்டப்படுவதாகவும் அதன் பின்னர் பொலிஸாரும் படையினரும் குறிப்பிட்ட வர்களின் வீடுகளுக்குச்  சென்று விசாரணைகளை  மேற்கொள்வதாகத்  தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் அமைதியும் சமாதானம் நிலவுவதாக அரசாங்கம் கூறிக்கொண்டிருக்கும் இந்நிலையில், இவ்வாறான தேவையற்ற நடவடிக்கைகள் மூலம்   தமிழ் மக்களின்   நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது.   அத்துடன்   இந்த மாவட் டத்தில் அச்சமான   சூழ்நிலையே உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பட்டிப்பளைச் சம்பவம் தொடர்பிலும் அவர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.    சட்டத்தைப் பேணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸாரே சிவிலியன்களைச் சுட்டுக்கொல்வதென்பது   ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்  எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு  பட்டிப்பளை  முனைக்காடு பிரதேசத்தில் நேற்று  முன்தினம்  இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சம்பவம் தொடர்பிலேயே தனது கண் டனத்தை வெளியிட்டுள்ளார்,   குற்றம் செய்தோரைக் கைது செய்து   நீதிமன் றத்தில் நிறுத்துவதே பொலிஸாரின் கடமை.
அதனை விடுத்து சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் செயற்படமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.  இந்த விடயம் தொடர்பில நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தான் ஜனாதிபதியைக் கேட்டுள்ளதாகவும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக