வியாழன், 21 அக்டோபர், 2010

Sri Devi கதை திருட்டு வழக்கு: நடிகை ஸ்ரீதேவி, போனி கபூருக்கு பிடி ஆணை

Sridevi and Boney Kapoorமீரட்: கதைத் திருட்டு வழக்கில் நடிகை ஸ்ரீதேவி மற்றும் அவர் கணவர் போனி கபூருக்கு பிடி ஆணை பிறப்பித்துள்ளது மீரட் நீதிமன்றம்

பிரபல நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் மற்றும் 4 பேர் மீது, பீர்பால்சிங் ராணா என்ற சினிமா கதாசிரியர், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், காபிரைட் பெற்ற தனது கதையை போனிகபூரின் பட நிறுவனத்துக்கு கடந்த 2004-ம் ஆண்டு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டதாகவும், ஆனால் அதே கதையை வைத்து போனிகபூர் நிறுவனம், கடந்த ஆண்டு வான்டட் என்ற படத்தை எடுத்து வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு பி.டி.பாரதி, ஸ்ரீதேவி உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார். ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, ஸ்ரீதேவி உள்ளிட்ட 6 பேர் மீதும் ஜாமீனில் விட முடியாத கைது வாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு நேற்று உத்தரவிட்டார். 6 பேரும் நவம்பர் 22-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு அவர் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக